ரஞ்சி கோப்பை : ஃபார்ம் குறித்து விமர்சனங்கள்… விராட் கோலிக்கு ஆதரவாக ராயுடு பதிவு!

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், அவருக்கு அம்பத்தி ராயுடு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Ambati Rayudu Kohli

டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு சங்வான் பந்தில் ‘க்ளீன் பவுல்டு’ ஆனார். விராட் கோலி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப்பின் ரஞ்சி கோப்பை எலைட் பிரிவில் கடைசி லீக்கில் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்கினார்.

பெரும் ஆரவாரத்துடன் ரஞ்சியில் களமிறங்கிய விராட் கோலி, 6 ரன்களில் அவுட்டாகி இருக்கிறார். ஹிமான்ஷு சங்வான் வீசிய பந்தில் அவர் கிளீன் பவுல்டாகி இருக்கிறார். 2 நாட்களாக அவரை காண கூடிய பெரும் ரசிகர்கள் கூட்டம் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளது. நெட்டிசன்கள் ‘எல்லாம் வெறும் சீன் தானா’ என கேள்விகளை எழுப்ப தொடங்கி விட்டார்கள்.

இந்நிலையில், கோலியின் ஃபார்ம் குறித்து சமூக வலைத்தளங்களில் எழும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், அவருக்கு ஆதரவராக அம்பத்தி ராயுடு தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து அம்பத்தி ராயுடு தனது எக்ஸ் தள பக்கத்தில், “தற்போதைக்கு விராட் கோலி ரஞ்சி போட்டிகளில் விளையாட தேவையில்லை. 81 சர்வதேச சதங்களுக்கும் அவரது நுட்பம் நன்றாகவே இருந்தது. இனிமேலும் அது நன்றாகவே இருக்கும்

அவரை யாரும் வற்புறுத்த வேண்டாம். அவருக்கு சிறிது நேரம் தேவை. அவருக்குள் இருக்கும் நெருப்பு தானாகவே எரியும். அவருக்கும் கொஞ்சம் மரியாதை அளியுங்கள், அவரை நம்புங்கள். மிக முக்கியமாக அவரை தனியாக இருக்க விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting