சுற்றுலா பயணிகளே கவனம்! கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்!
கொடைக்கானலில் இன்று (ஏப்ரல் 1, 2025) முதல் ஜூன் 30, 2025 வரை இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இன்று முதல், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வெளியூர் மற்றும் உள்ளூர் வாகனங்களும் முன்கூட்டியே இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். இ-பாஸ் இல்லாத வாகனங்கள் நுழைவு சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தப்படும். இந்த நடைமுறை ஜூன் 30, 2025 வரை அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை இது தொடரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானல் மட்டுமின்றி, அதைப்போல, நீலகிரியிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. குன்னூர், ஊட்டி, கோத்தகிரி செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறப்பட்டுள்ளதா என அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் “epass.tnega.org” என்ற இணையதளம் மூலம் தங்கள் பயண விவரங்களைப் பதிவு செய்து இ-பாஸ் பெறலாம். அரசுப் பேருந்துகள் மற்றும் உள்ளூர் பதிவு எண் (TN) கொண்ட வாகனங்களுக்கு சில விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பு, மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு அரசால் உறுதிப்படுத்தப்பட்டு, இன்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வார நாட்களில் 4,000 வாகனங்களுக்கும், வாரயிறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) 6,000 வாகனங்களுக்கும் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025