தமிழ் சினிமாவில் சோகம்! பிரபல இயக்குனர் திடீர் மரணம்!

தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

RIP Director SS Stanley

சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி. அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி,  பெரியார், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார், மகாராஜா உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார்.

கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று மாலை சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் எஸ்.எஸ்.ஸ்டான்லியின் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies