வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
தங்கம் விலை வரலாறு காணாத வகையில்உயர்ந்துள்ளது . இன்று நாளில் கிராமுக்கு 105 ரூபாயும்,சவரனுக்கு 840 ரூபாயும் உயர்வு.

சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16, 2025 அன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு (8 கிராம்) 760 ரூபாய் உயர்ந்து, 22 காரட் ஆபரணத் தங்கம் 70,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் சவரனுக்கு 71-ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி இன்று ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு 840 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,770க்கு விற்பனை. வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது என்பதால் நகை வாங்கவே மக்கள் யோசிக்கிறார்கள்.
அதே சமயம் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதையடுத்து, பங்குச் சந்தைகளில் எதிர்பாராத சரிவு ஏற்பட்டது.
இதனால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி திரும்பியுள்ளனர். இதன் விளைவாக, இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவு தங்கத்தின் விலையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.