1 பில்லியன் டாலர் கடன்.., IMF அனுமதி.! “இப்படி நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்?”- உமர் அப்துல்லா கேள்வி
சர்வதேச நிதியத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு நிதி வழங்கினால் இருநாடுகளிடையே நிலவும் பதற்றம் எப்படி தணியும்? என ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவ நிலையங்களை தாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் தாக்குதல் தொடருவதால், பொதுமக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் தொகை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) அனுமதி அளித்தது. கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், சர்வதேச நிதியத்தின் நிர்வாக குழு கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்க IMF முன்வந்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நன்றி கூறியுள்ளார்.
ஆனால், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நிதியத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. தற்போது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலமாக பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதி வழங்கினால் அந்த நாடு எப்படி போர் பதற்றத்தை நிறுத்தும் என்று உலக நாடுகள் நம்புகின்றன? என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலு அவர், பூஞ்ச், ரஜோரி, உரி, டாங்தார் உள்ளிட்ட பல இடங்களை அழிக்க பாகிஸ்தான் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களுக்கும் நிதி அளிக்க ஏன் சர்வதேச நிதியம் நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
I’m not sure how the “International Community” thinks the current tension in the subcontinent will be de-escalated when the IMF essentially reimburses Pakistan for all the ordnance it is using to devastate Poonch, Rajouri, Uri, Tangdhar & so many other places.
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8,542 கோடி கடன் வழங்க IMF முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் IMF திட்டங்களின் செயல்திறன் குறித்து கவலை எழுப்பிய இந்தியா, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நிதி தவறாகப் பயன்படுத்தப்படலாம் என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.