திடீரென மயக்கம் போட்ட விஷால்…இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?
சரியாக சாப்பிடாதது மற்றும் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் விஷால் மயக்கம் போட்டதாக அவருடைய மேனஜர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி மாதம் கூட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது கடும் காய்ச்சல் காரணமாக அவருடைய முகமே மாறி பேசும்போது கை நடுங்கிக்கொண்டு இருந்தார். அதன்பிறகு அவருக்கு காய்ச்சல் தான் மற்றபடி எதுவும் இல்லை என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
அதன்பிறகு விஷால் மெல்ல மெல்ல தன்னுடைய பழைய தோற்றத்திற்கு திரும்பினார். இப்படியான சூழலில் தான் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவை ஒட்டி மிஸ் திருநங்கை அழகிப்போட்டி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஷால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். வரும்போது முகத்தில் புத்துணர்வுடன் இருந்த அவர் மேடையில் பேசும்போது திடீரென மயக்கம்போட்டு கீழே விழுந்தார்.
அவர் மயக்கம்போட்டு விழுந்தவுடன் அங்கிருந்தவர்கள் விஷாலை தூக்கி அவருக்கு கற்று வருவதற்கு மின் விசிறியையும் எடுத்துவந்தனர். முதற்கட்டமாக சரியாக சாப்பிடாதது மற்றும் கூட்டம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டது என தெரியவந்தது. அதன்பிறகு, தண்ணீர் தெளித்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். பிறகு 20 நிமிடங்களுக்கு பிறகு விஷால் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் இருக்கும் விஷால் உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறது? என கேள்விகள் எழும்ப தொடங்கிவிட்டது. இதனையடுத்து, மருத்துவமனை தரப்பில் இருந்து அவருடைய உடல் நலம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை தரப்பு சொன்னதாக அவருடைய மேனஜர் தெரிவித்த தகவலின் படி ரியாக சாப்பிடாதது, கூட்டம் அதிகம் கூடியதன் காரணமாகத்தான் அவர் மயங்கி விழுந்தார். மருத்துவரிடம் சென்று வந்த பிறகு நலமோடு இருக்கிறார். பயப்படும் அளவுக்கு அவருக்கு எதுவும் ஆகவில்லை. அவர் நலமாக இருக்கிறார்” எனவும் தெரிவித்தார்.