சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?
நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு எப்போது திருமணம் என்கிற கேள்வியை தான் பலரும் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். விஷாலும் முன்னதாக இந்த மாதிரி கேள்விகள் வந்தாலே திருமணம் நடக்கும் என்பது போல மட்டுமே பதில் சொல்லிவிட்டு மழுப்பிவிட்டு சென்றுவிடுவார். ஆனால், சமீபகாலமாக அவருடைய பேட்டிகளை எடுத்து பார்த்தால் இந்த வருடம் நிச்சயமாக தான் திருமணம் செய்துவிடுவேன் என்பது போலவே பேசிவருகிறார்.
உதாரணமாக சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஷால் ” முதலில் நடிகர் சங்க கட்டடதிறப்பு விழா நடைபெறும். அதன்பிறகு தான் என்னுடைய திருமண விழா நடைபெறும். கட்டட விழா நடந்து முடிந்தால் தான் என்னுடைய திருமணம் நடைபெறும் என தெரியாமல் வார்த்தையை விட்டுவிட்டேன். அதற்கு 9 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு வழியாக கட்டிடம் வந்துவிட்டது” என தெரிவித்து இருந்தார்.
கட்டடத்திற்கான திறப்பு விழாவை வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விஷால் தன்னுடைய திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. திருமணம் காதல் திருமணமா? என கேட்கப்படும் கேள்விகளும் விஷால் பேட்டிகளில் வெட்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
அந்த நடிகை வேறு யாரும் இல்லை கபாலி, இருட்டு, பேராண்மை, காலக்கூத்து, யா யா, உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சாய் தன்ஷிகா தான். இவரை தான் விஷால் திருமணம் செய்துகொள்ள இப்போது முடிவு செய்திருக்கிறாராம். இந்த தகவல் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் ட்ரென்டிங் செய்தியாகவும் மாறியுள்ளது. பொதுவாகவே சினிமாத்துறையில் ஒருவருக்கு திருமணம் என்றால் இப்படியான செய்திகளும் கிளம்புவது வழக்கமான ஒன்று தான். இது வதந்தி தகவலா அல்லது உண்மையான தகவலா என்பதை அவர்களுடைய தரப்பில் இருந்தே தெரியப்படுத்தினால் மட்டும் தான் தெரியவரும்.