ரவி மோகன் விவகாரம்: ”நாளைய விடியல்” – கெனிஷாவின் பதிவால் பரபரப்பு.!
நடிகர் ரவி மோகனின் காதலி என்று சொல்லப்படும் கெனீஷா பிரான்சிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பரபரப்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் டேட்டிங் செய்வதாகவும் வதந்தி பரவி வருகிறது. ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் சமூக வலைத்தள பக்கங்களில் மாறிமாறி ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
முன்னதாக, ரவி மோகன் பற்றி ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அதற்கு பதில் கொடுத்து ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார். அதன் பின் ஆர்த்தியின் அம்மா வெளியிட்ட அறிக்கையும் வைரல் ஆனது. இந்த நிலையில், பாடகி கெனீஷா பிரான்சிஸுடனான தனது உறவை நடிகர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அதற்கு காரணம் அவரது இன்ஸ்டகிராம் பதிவு தான்.
பாடகி கெனிஷா வெளியிட்ட பதிவில், ”என் மீது நீங்கள் குச்சிகளும் கற்களும் வீசினாலும் அது என்னை காயப்படுத்தாது. நான் இசையைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன், நாளைய விடியல்கள் மற்றும் புதிய தொடக்கங்களுக்கு ஆழமான துயரங்களிலிருந்து, என் ஆன்மா பாடுகிறது” என கூறியுள்ளார்.
View this post on Instagram