காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!
தூத்துக்குடி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே போலீஸ் துப்பாக்கி சுடுதளம் உள்ளது. இதன் அருகே உள்ள பசுமைக் குடில் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் முற்றிலும் எரிந்து கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.
முழுவதும் எரிந்த நிலையில் கார் ஒன்று நிற்பதாக முறப்பநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை முதலில் கண்ட உள்ளூர் மக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் காரில் எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக, காவல்துறையினர், சம்பவ இடத்தை முற்றிலுமாக மூடி, தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்யத் தொடங்கினர்.
இப்போது, கார்யாருடையது, காரில் எரிந்த நிலையில் இருப்பவர் யார் என்றும் விசாரித்து வரும் காவல்துறையினர் இது தற்கொலையா, கொலையா, அல்லது விபத்து என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.