சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
நடிகை தமன்னாவை மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக 6.2 கோடி ரூபாய்க்கு கர்நாடக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு இணையத்தில் பெரும் விமர்சனத்தை தூண்டியுள்ளது.
இந்த ஒப்பந்தம் தமன்னாவுக்கு மற்றொரு தொழில்முறை மைல்கல்லாக இருக்கலாம் என்றாலும், கன்னட நடிகர்களை விட தமன்னாவை தேர்ந்தெடுத்ததற்காக கர்நாடக அரசு மீது சமூக ஊடக பயனர்களில் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆம், கர்நாடகத்தை சேர்ந்த நடிகர், நடிகைகளை தேர்வு செய்யாதது ஏன் என்று கன்னட அமைப்புகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையில், கன்னட நடிகையை தேர்வு செய்யாதது குறித்து எம்பி பாட்டீல், எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் முடிவுக்கு வரவேற்பு அளித்தார்.
மைசூர் சாண்டல் சோப்பு
மைசூர் சாண்டல் சோப்பு 1916 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது, இது இன்னும் தென்னிந்திய மக்களிடையே மிகவும் பிரபலமான சோப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. மைசூர் மன்னர், கிருஷ்ண ராஜா உடையார் IV, 1900 களின் முற்பகுதியில் பெங்களூரில் அரசாங்கம் சார்பில் சோப்பு தொழிற்சாலையை நிறுவினார். அப்போதிலிருந்து, இந்த பிராண்ட் கர்நாடகாவில் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.