கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 230 ரன்கள் குவித்துள்ளது.

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அஹமதாபாத்தில் இருக்கும் நரேந்திரமோடி மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் வெற்றிபெற்றாலும் தோல்வி அடைந்தாலும் வெளியே தான் எனவே அதிரடியாக வெளியே போவோம் என்பது போல டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தேர்வு செய்தது.
பேட்டிங்கை தேர்வு செய்தது மட்டுமின்றி அதற்கு ஏற்றது போல அதிரடியாக ஆடியது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆயுஷ் மத்ரே தன்னுடைய வழக்கமான பாணியில் சிக்ஸர் பவுண்டரி என தெறிக்கவிட்டு பவர்ப்பிளேயில் அதிரடி காண்பித்தார். ஆயுஷ் மத்ரே 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவருக்கு அடுத்ததாக டெவோன் கான்வேவும் அதிரடியாக விளையாடினார்.
நீங்க போங்க நான் பாத்துக்கிறேன் என்பது போல சிக்ஸர் பவுண்டரி என விளாசி 52 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக உர்வில் படேல் 37, சிவம் துபே 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க சென்னை அணி கொஞ்சம் டீஜேஹாடுமாறியது என்று சொல்லாம். அந்த சறுக்கலில் இருந்து அணியை மீட்டெடுக்கவேண்டும் என்றால் ஒரு சிறந்த பார்ட்னர் ஷிப் அமைக்கவேண்டும் என்ற சூழ்நிலையும் ஏற்பட்டது.
அந்த சமயம் தான் டெவால்ட் ப்ரீவிஸ், ரவீந்திர ஜடேஜா இருவரும் நிதானம் கலந்த அதிரடியில் விளையாடினார்கள். ஜடேஜா (21*) கொஞ்சம் நிதானமாக விளையாடினாலும் கூட டெவால்ட் ப்ரீவிஸ் நம்மளோட முடிவு அதிரடி தான் என்பது போல கிடைக்கும் பந்துகளை சிக்ஸர் பவுண்டரி என பறக்கவிட்டு கடைசி நேரத்தில் அரை சதமும் விளாசினார்.
இவர்களுடைய அதிரடி ஆட்டம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். சென்னை 230 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கவுள்ளது.