‘நிகழ்நேர தரவுகள் இனி மக்களுக்கு கிடையாது’.., வானிலை மையத்தின் அதிர்ச்சி செயல்.!
இந்திய வானிலை மையம் கடந்த மாதம் நிகழ்நேர தரவுகளை பொதுபயன்ப்பாட்டிலிருந்து முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி : இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிடப்படும் நிகழ்நேர தரவுகளை (IMD-AWS Reports) பொதுபயன்பாட்டிலிருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து RTI ல் விளக்கம் கேட்டதற்கு நிகழ்நேர தரவுகள் (IMD-AWS Reports) இனி வானிலை துறை அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும் பொதுமக்கள் பயன்ப்படுத்த முடியாது என இந்திய வானிலை மையம் அதிர்ச்சி பதிலை கொடுத்துள்ளது.
இதன் மூலம் நிகழ்நேர மழை அளவு, மழையின் தீவிரம், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றை தனியார் வானிலை ஆய்வாளர்கள் மட்டுமின்றி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என யாரும் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இனி ஒருநாளுக்கான தகவலே பொதுமக்களுக்கு கிடைக்கும். குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு மழை, வெயில் என்ற தகவலை வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் மட்டுமே அறிய முடியும். இதன் தாக்கம் இயற்கை பேரிடர்கள் காலத்தில் மிக தீவிரமாக இருக்க கூடும் என்பது தான் வருத்தமான செய்தியாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025