வலுக்கும் வார்த்தை மோதல்! “புத்தியை இழந்துடீங்க மஸ்க்”…எச்சரிக்கை விட்ட டிரம்ப்!
மஸ்க் எனக்கு எதிராக இருந்தாலும் கவலை இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டது பேசுபொருளாக வெடித்துள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் மஸ்க், டிரம்பின் பிரச்சாரத்துக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதியுதவி செய்து, அவரது வெற்றிக்கு பெரிதும் உதவினார். ஆனால், இப்போது டிரம்ப், மஸ்க்குடன் பேச விருப்பமில்லை என்றும், அவரது நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையேயான இந்த மோதல் கடந்த ஜூன் 5, 2025 அன்று தொடங்கியது. ஏனென்றால், டிரம்ப் One Big Beautiful Bill என்ற பொருளாதார மசோதாவை அறிமுகம் செய்திருந்தார். இந்த மசோதாவில் பெரிய அளவிலான வரிக் குறைப்புகள் இருந்தன, ஆனால் இதனால் நாட்டின் கடன் அதிகரிக்கும் என மஸ்க் எச்சரித்தார். இது டிரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
எனவே, டிரம்ப் கூறுகையில், மஸ்க் எனக்கு எதிராக நிற்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார். இதை அவர் பல மாதங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். இது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த மசோதா. இது அரசாங்கத்தின் செலவினங்களில் பெரும் தொகையை மிச்சப்படுத்தும்” என மஸ்க்கிற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருந்தார்.
அதனை தொடர்ந்து இது குறித்து எலான் மஸ்க் பேசுகையில், ”அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவருக்குப் பதிலாக துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் நியமிக்கப்பட வேண்டும் என வெளிப்படையாக தெரிவித்தார். எனவே, மாறி மாறி இருவரும் பேசிக்கொண்டு வரும் நிலையில் இவர்களுடைய விவகாரம் ஹாட் டாப்பிக்காகவும் மாறியிருக்கிறது.
இவர்களுடைய மோதல் மேலும் தீவிரமடைந்தபோது, மஸ்க், டிரம்ப் பற்றி எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்களில் பெயர் உள்ளதாகவும், அதனால்தான் அந்த ஆவணங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது, பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் ட்ரம்பின் பெயர் இருப்பதாலயே, அவர் அதனை வெளியிடவில்லை. டொனால்ட் ட்ரம்பின் பட்ஜெட் மசோதா அருவருக்கத்தக்கது. மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும். மசோதா எனக்கு காட்டப்படவேயில்லை என மஸ்க் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து டிரம்ப், எலான் மஸ்க் குறித்து பேசும்போது, அவர் “புத்தியை இழந்துவிட்டார்” (lost his mind) என்று கடுமையாக விமர்சித்தார். மஸ்க்குடன் பேசுவதற்கு தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று தெளிவாக அறிவித்தார். மேலும், மஸ்க்கின் நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்க்கு அமெரிக்க அரசு வழங்கி வரும் மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!
July 25, 2025
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!
July 25, 2025
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!
July 24, 2025
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025