"மக்களே சொல்லிட்டாங்க"...புதிய கட்சியை உருவாக்குவதற்கான நேரம்? மஸ்க் போட்ட பதிவு!

அமெரிக்காவின் 80% நடுத்தர மக்களின் பிரிதிநிதியாக புதிய கட்சியை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதா? என எக்ஸ் தளத்தில் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

Elon Musk

வாஷிங்டன் :அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல், அரசியல் மற்றும் வணிக உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட முக்கியமான காரணமே ட்ரம்ப் கொண்டு வந்த  One Big Beautiful Bill என்ற பொருளாதார மசோதா தான். டிரம்ப் இந்த மசோதாவை கொண்டுவந்தவுடனே இந்த மசோதாவில் பெரிய அளவிலான வரிக் குறைப்புகள் இருந்தன, ஆனால் இதனால் நாட்டின் கடன் அதிகரிக்கும் என மஸ்க் எச்சரித்தார்.

எனவே, இது ட்ரம்பிற்கு கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், மஸ்க் எனக்கு எதிராக நிற்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார். இதை அவர் பல மாதங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் என தெரிவிக்க மற்றோரு பக்கம் மஸ்க், டிரம்ப் பற்றி எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்களில் பெயர் உள்ளதாகவும், அதனால் தான் அந்த ஆவணங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை எனவும், நான் இல்லை என்றால் டிரம்ப் வெற்றிபெற்றிருக்கமாட்டார் எனவும் தெரிவித்தார்.

அதன்பின் இன்று காலை டிரம்ப், எலான் மஸ்க் குறித்து பேசும்போது, அவர் “புத்தியை இழந்துவிட்டார்” (lost his mind) என்று கடுமையாக விமர்சித்தார். மஸ்க்குடன் பேசுவதற்கு தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று தெளிவாக அறிவித்தார். மேலும், மஸ்க்கின் நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்க்கு அமெரிக்க அரசு வழங்கி வரும் மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

எனவே, இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டு வார்த்தை போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில், மஸ்க் இன்று காலை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அமெரிக்காவில் “நடுத்தர 80% மக்களை” உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய அரசியல் கட்சி தேவையா? இதை ஒரு கருத்துக்கணிப்பாக (poll) பதிவு போட்டார்.

அந்த பதிவை பார்த்த இந்த கருத்துக்கணிப்பில் 80% பேர் “ஆமாம், புதிய கட்சி தேவை”னு வாக்கு அளித்தார்கள். பிறகு இதைப் பார்த்து மஸ்க், “மக்கள் தங்கள் கருத்தை சொல்லிட்டாங்க! நடுத்தர 80% மக்களை பிரதிநிதித்துவப்படுத்த புது கட்சி வேண்டும் என கூறினார்.அதன் பின்  ஒரு பயனர் “அமெரிக்கா கட்சி” (The America Party)னு பெயர் பரிந்துரைச்சார். மஸ்க்குக்கு இந்தப் பெயர் மிகவும் பிடித்திருந்த நிலையில், “இந்தப் பெயர் நல்லா இருக்கு! உண்மையாவே அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி என்று பதில் அளித்தார். எனவே, அரசியல் கட்சியை மஸ்க் தொடங்கப்போகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

unknown node