ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைத்தது.

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்று முதல் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை :
இன்று (20-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைத்தது. அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி, மதுரை நகரத்தில் 102.92 டிகிரி, கடலூரில் 100.93 டிகிரி,
பரங்கிப்பேட்டையில் 100.76 டிகிரி, திருச்சியில் 100.58 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 100.22 டிகிரி, ஈரோட்டில் 100.04 டிகிரி என 7 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது. இதில் மதுரையில் இயல்பைவிட 3 டிகிரி வரையில் வெப்பம் உயர்ந்து காணப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025