அகமதாபாத் விமான விபத்து : ‘இழப்பீடு இல்லை’ என மிரட்டுவதாக எழுந்த புகார்!

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஏர் இந்தியா அறிவித்த ரூ.1 கோடி இழப்பீடை பெறும் செயல்முறை கடுமையாக இருப்பதாக பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

ahmedabad plane crash

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8 ட்ரீம்லைனர்) லண்டனுக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் மற்றும் 29 மருத்துவ மாணவர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தது.

ஆனால், இழப்பீடு பெறுவதற்கான செயல்முறை மிகவும் கடுமையாக இருப்பதாகவும், “விண்ணப்பம் முழுமையாக இல்லையெனில் இழப்பீடு இல்லை” என மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இங்கிலாந்து குடும்பங்களின் வழக்கறிஞர், ஒருவர் பேசும்போது ” விபத்தில் உயிரிழந்த பிரிட்டனைச் சேர்ந்த பயணிகளின் குடும்பங்கள், ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர தயாராகி வருவதாக தெரிவித்தனர்.

“ஏர் இந்தியாவின் இழப்பீடு செயல்முறை மிகவும் சிக்கலானது மற்றும் கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறது. விண்ணப்பங்களில் சிறு குறைபாடு இருந்தாலும் இழப்பீடு மறுக்கப்படுகிறது. மேலும், இழப்பீடு தொகையை குறைக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது,” என கீஸ்டோன் சட்ட நிறுவனத்தின் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

மருத்துவர் மீனாக்ஷி பரிக், பி.ஜே. மருத்துவக் கல்லூரி டீன் விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி விடுதியில் உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் இழப்பீடு கோருவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார். “ஏர் இந்தியாவிடம் இருந்து இழப்பீடு பற்றி எந்த தெளிவான தகவலும் இல்லை. இழப்பீடு வழங்குவதற்கு முன், ஆவணங்கள் மற்றும் டி.என்.ஏ. சோதனைகள் போன்றவற்றில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன,” என அவர் பிபிசியிடம் கூறினார்.

அஜய் வால்கி, உயிர் பிழைத்தவரின் உறவினர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணியான விஷ்வாஷ்குமார் ரமேஷின் உறவினர் அஜய் வால்கி, “ஏர் இந்தியாவின் தகவல் தொடர்பு மிகவும் மோசமாக உள்ளது. என் உறவினர் உயிருடன் இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார், ஆனால் அவரது சகோதரர் அஜய் குமார் ரமேஷின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இழப்பீடு பற்றி கேட்கும்போது, ஆவணங்களில் குறை உள்ளதாக கூறி மறுக்கப்படுகிறது,” என பிபிசியிடம் தெரிவித்தார்.

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிய நகந்தோயி ஷர்மாவின் குடும்பம், “எங்களுக்கு எந்தவித தகவலும் ஏர் இந்தியாவிடமிருந்து வரவில்லை. இழப்பீடு பற்றி கேட்கும்போது, விண்ணப்பம் முழுமையாக இல்லை என்று கூறி மிரட்டுகிறார்கள். எங்களுக்கு எப்படி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், எங்கள் மகளை இழந்து தவிக்கிறோம்,” என சோகத்துடன் பிபிசியிடம் தெரிவித்தனர். தொடர்ச்சியாக இப்படி புகார்கள் எழுந்துள்ளது பேசுபொருளாக வெடித்துள்ளது. விரைவில் இதற்கு ஏர் இந்தியா தரப்பு விளக்கம் அளித்து இழப்புடு வழங்குவதற்கான வேலைகளை தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Ranya Rao
Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc