”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்று டி.ஜி.பி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Toll gate

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில், வரும் 10ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், மேற்கண்ட 4 சுங்கச்சாவடி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், ரூ.276 கோடி சுங்கச்சாவடி கட்டணம் நிலுவையில் உள்ளதாகக் கூறி, கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் வழியாக அரசுப் பேருந்துகளை இயக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவினால், சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க தமிழக டிஜிபி, தென் மண்டல ஐ.ஜி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்