நாமக்கல்லில் பெண்களை குறிவைத்து கிட்னி கொள்ளை.., ஆட்சியர் அலட்சிய பதில்.!
நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் ஏழைப் பெண்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக எழுந்த புகார் எழுந்துள்ளது.

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத கிட்னி கொள்ளை தொடர்பான செய்திகள் சமீபத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஒரு தகவளின்படி, பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் வறுமையில் வாழும் தொழிலாளர்களை குறிவைத்து, அவர்களின் கிட்னிகளை சில கும்பல்கள் மூன்று முதல் பத்து லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி பறிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு மருத்துவமனைகள் கூட்டாக சேர்ந்து இந்த கிட்னி கொள்ளை வேளையில் ஈடுபட்டிருப்பதாகவும், பல பெண்கள் ஒற்றைக் கிட்னியுடன் வாழ்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இது குறித்து அலட்சியமாக பதிலளித்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்புகையில், ” எப்போது பார்த்தாலும் இதுபோல் ஏதாவது ஒன்று நடக்கும் ஒன்று தான் என்பது போல் ஆட்சியர் அலட்சிய பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் கிட்னி திருட்டு நடப்பதை ஆட்சியரே ஒப்புக் கொள்கிறாரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
கோவை மாணவி கூட்டு வன்கொடுமை – 7 பேருக்கு வாழ்நாள் சிறை.!
July 18, 2025
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025