தமிழகம் வரும் பிரதமர் மோடி.., முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு.!

தமிழ்நாடு வரும் பிரதமரிடம் வழங்க வேண்டிய கோரிக்கை மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்துள்ளார்.

MK Stalin - PM Modi

சென்னை : சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து 6-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருந்தாலும்,  அவர் மருத்துவமனையில் இருந்தவாறே அரசு பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், ‘ஆஞ்சியோ’ சிகிச்சைக்கு பிறகு 2 நாள்கள் கழித்து முதல்வர் ஸ்டாலினின் புதிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இன்று (ஜூலை 26-ம் தேதி) இரவு 8 மணிக்கு தூத்துக்குடியில் ரூ.4,800 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இதனை முன்னிட்டு, தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த மனுவை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், ”மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மாண்புமிகு பிரதமரிடம் வழங்குவார்” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்