டெல்லி : இந்தியாவில் ஒரு நடுத்தரக் குடும்பம் புதுசாக ஒரு ஸ்கூட்டர் வாங்கத் திட்டமிட்டால், அவர்களின் மனதில் முதலில் மோதும் இரண்டு ஜாம்பவான்கள் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa 6G) மற்றும் சுசுகி அக்சஸ் 125 (Suzuki Access 125) ஆகும். பல வருடங்களாக இந்தியக் குடும்பங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள இந்த இரண்டு ஸ்கூட்டர்களில், தற்போதைய 2026-ம் ஆண்டில் குடும்பப் பயன்பாட்டிற்கு எது மிகச்சிறந்த சாய்ஸ் என்பதை பற்றி பார்ப்போம்.

வடிவமைப்பு மற்றும் குடும்பத்திற்கான இடவசதி (Design & Comfort)

குடும்பத்தோடு பயன்படுத்துகிறோம் என்றால் வண்டியின் இருக்கையும், லக்கேஜ் வைக்கும் இடமும் தான் முதலில் முக்கியம். ஹோண்டா ஆக்டிவா 6G மாடலானது முழுமையான மெட்டல் பாடியைக் (Metal Body) கொண்டு மிகவும் பலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எளிய மற்றும் பாரம்பரியமான தோற்றம் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் ஓட்டுவதற்கு ஏதுவாக இருக்கும்.

ஆனால், சுசுகி அக்சஸ் 125 [Suzuki Access 125] ஸ்கூட்டரோ சற்று கிளாசிக் ரெட்ரோ (Retro Design) பாணியில், குரோம் ஃபினிஷ் கண்ணாடிகள் மற்றும் அழகான எல்இடி விளக்குகளுடன் பார்க்க இன்னும் பிரீமியமாகத் காட்சியளிக்கிறது. இருக்கை வசதியைப் பொறுத்தவரை சுசுகி அக்சஸ் வண்டியில் நீளமான மற்றும் அகலமான ஒற்றை இருக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், பின்னால் குடும்பத்தினரை அமரவைத்து லாங் ரைடு செல்லும் போது கூடுதல் சவுகரியம் கிடைக்கிறது.

இன்ஜின்

இங்குதான் இரண்டு வண்டிகளுக்கும் இடையே ஒரு பெரிய கிளாஸ் வித்தியாசம் உள்ளது. ஹோண்டா ஆக்டிவா 6G ஸ்கூட்டரானது ஒரு 109.51 cc எஞ்சின் மூலம் இயங்குகிறது, இது 7.7 bhp பவரையும், 8.8 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. நகரத்தின் மிதமான டிராஃபிக்கில் சத்தமில்லாமல் ஸ்மூத்தாக நகர்ந்து செல்ல இந்த இன்ஜின் பவர் மிகச் சரியாக இருக்கும்.

மறுபுறம், சுசுகி அக்சஸ் 125 வண்டியில் பெரிய 124 cc இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.3 bhp பவரையும், அசுரத்தனமான 10.2 Nm காஷ்டத்தையும் (டார்க்) வாரி வழங்குகிறது. இதனால் வண்டியில் பின்னால் ஒருவரை அமரவைத்துக்கொண்டு மேம்பாலங்களில் ஏறும் போதும், டிராஃபிக்கில் முந்திச் செல்லும் போதும் சுசுகி அக்சஸ் 125 எவ்வித திணறலும் இல்லாமல் மிகச் சீராகவும் வேகமாகவும் பறக்கிறது.

மைலேஜ்

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறி வரும் இந்த சூழலில், நடுத்தரக் குடும்பங்களுக்கு மைலேஜ் தான் ஆகச்சிறந்த ஆயுதம். ஹோண்டா ஆக்டிவா 6G தனது மேம்பட்ட இஎஸ்பி (eSP) தொழில்நுட்பம் மூலம் நிஜ உலகச் சாலைகளில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக 47 முதல் 52 கி.மீ வரை நம்பகமான மைலேஜை அசால்ட்டாக வழங்குகிறது.

அதே நேரத்தில், பெரிய 125சிசி இன்ஜினைக் கொண்டிருந்தாலும் சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டரும் பெட்ரோல் சிக்கனத்தில் சளைத்தது அல்ல. இதுவும் தனது சிறந்த இன்ஜின் டியூனிங் மூலம் சிட்டி மற்றும் ஹைவேஸிலும் சேர்த்து ஒரு லிட்டருக்குத் தோராயமாக 45 முதல் 50 கி.மீ வரை மிக நேர்த்தியான மைலேஜைத் தந்து பாக்கெட்டைப் பாதுகாக்கிறது. மைலேஜ் விஷயத்தில் இரண்டுமே கிட்டத்தட்ட சம பலத்துடன் மோதுகின்றன.

தொழில்நுட்ப வசதிகள்

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை சுசுகி நிறுவனம் தனது அக்சஸ் 125 மாடலில் கூடுதல் சலுகைகளை அள்ளித் தந்துள்ளது. இதன் டாப் வேரியண்ட்டில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி (Ride Connect Edition) வசதியுடன் கூடிய டிஜிட்டல் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொபைல் போன் கால்கள், எஸ்எம்எஸ் அலர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் (Navigation) போன்ற நவீன வசதிகளை நாம் வண்டியின் திரையிலேயே பார்த்துக் கொள்ளலாம். ஆனால், ஹோண்டா ஆக்டிவா 6G இன்றும் தனது எளிய அனலாக் கிளஸ்டர் மற்றும் வெளிப்புற பெட்ரோல் மூடி (External Fuel Lid) போன்ற மிகவும் அடிப்படையான பிராக்டிகல் வசதிகளுடன் மட்டுமே தொடர்கிறது.

விலை விவரம்

விலைப்பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா 6G ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.78,166 முதல் தொடங்குகிறது. மறுபுறம், பெரிய இன்ஜின் மற்றும் கூடுதல் பிரீமியம் வசதிகள் கொண்ட சுசுகி அக்சஸ் 125 காரின் ஆரம்ப விலை சுமாராக ரூ. 80,838 முதல் தொடங்குகிறது. இரண்டு வண்டிகளுக்கும் இடையே வெறும் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை மட்டுமே வித்தியாசம் உள்ளது.

2026-ல் எந்த ஃபேமிலி ஸ்கூட்டர் ஒர்த்?

சுருக்கமாகச் சொன்னால், இரண்டுமே குடும்பப் பயன்பாட்டிற்கு மிகச்சிறந்த வாகனங்கள் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உங்களுக்குக் குறைந்த பட்ஜெட்டில், இந்தியாவின் மிகப்பெரிய சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் வலுவான மெட்டல் பாடி கொண்ட ஒரு எளிய, அசைக்க முடியாத குடும்ப வண்டி வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் தாராளமாக Honda Activa 6G ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால், நீங்கள் செலுத்தும் கூடுதல் ரூ.4,000 பணத்திற்கு மிரட்டலான 125சிசி இன்ஜின் பவர், அதிக சொகுசான நீண்ட இருக்கை, ஸ்போர்ட்டி ஹேண்ட்லிங் மற்றும் நேவிகேஷன் போன்ற அட்வான்ஸ்டு டிஜிட்டல் வசதிகள் வேணும்னு நினைச்சீங்கன்னா, 2026-ல் உங்களுக்குப் பக்கா தேர்வாக இருக்கும்.