சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்ப்போம்.

கடந்த ஜூலை 20-ம்தேதி கிராம் ஒன்றுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ. 13,150-க்கும், சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 1,05,200-க்கும் விற்பனை தொடங்கிய தங்கம், அதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்தது.

அதன்படி, ஜூலை 21-ல் கிராம் ரூ. 13,220 (சவரன் ரூ. 1,05,760) என்றும், ஜூலை 22-ல் கிராம் ரூ. 13,430 (சவரன் ரூ. 1,07,440) என்றும் உயர்ந்தது. மேலும், ஜூலை 23 அன்று கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 13,500-க்கும், சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் வரலாற்றுச் சாதனையாக ரூ. 1,08,000 வரை உச்சம் தொட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை 24-ம்தேதி மார்க்கெட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, கிராமுக்கு ரூ. 270 குறைந்து ரூ. 13,230-க்கும், சவரனுக்கு அதிரடியாக ரூ. 2,160 குறைந்து ரூ. 1,05,840-க்கும் விற்பனையாகி நகை வாங்குவோருக்குப் பெரும் நிம்மதியை அளித்தது.

ஆனால், நேற்று தங்கம் விலையில் ஏற்பட்ட அந்தச் சரிவு நீடிக்காமல், இன்று தங்கம் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 13,300 என்ற விலையிலும், சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,06,400 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை; அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 240 என்றும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,40,000 என்றும் தொடர்ந்து நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.