அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை. வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகரித்துள்ள நிலையில், எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒட்டகசிவிங்கியிடம் உதை வாங்கிய காண்டாமிருகம் பதறியடித்து ஓட்டம். உலகிலேயே மிகவும் உயரமான விலங்கு என்றால் அது ஒட்டகச்சிவிங்கி தான். இந்த ஓட்டாகசிவிங்கி 6 முதல் 18 அடி வரை வளரக் கூடியது. அதேபோல், உலகிலேயே அதிக எடை கொண்ட விலங்குகளில் காண்டாமிருகமும் ஒன்று. காண்டாமிருகம் தோராயமாக 3,000 கி எடை கொண்டது. இந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், காண்டாமிருகம் ஒன்று, ஓட்டாகசிவிங்கியின் பின்புறம் தொடுகிறது, […]
தண்ணீர் எவ்வாறு குடிக்க வேண்டும்? நமது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தண்ணீர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் நீர்சத்து குறையும் போது, பல விதமான நோய்கள் ஏற்படக் கூடும். அனால், நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், அந்த தண்ணீரை குடிப்பதற்கென்று ஒரு முறை உள்ளது. நம்மில் பலர் வெளியில் வேலையாக சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பின் போது, அவசரத்தில் தண்ணீரை நின்றுக் கொண்டே அவசர அவசரமாக தண்ணீர் குடிப்பதுண்டு. ஆனால், அவ்வாறு குடிப்பது […]
இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூர் அருகே உள்ள புளிகரை வயல்பகுதியில், ஏஞ்சல் என்பவருக்கு சொந்தமான வயல்பகுதியில், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வயலில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்த தொழிலாளர்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் இடத்திற்கு, பற்காம்புப்பிடிக்கும் பயிற்சி பெற்ற, வனத்துறை பணியாளர் செல்வராஜுடன் வந்த வனத்துறையினர், அந்த மலைப்பாம்பை பிடித்து, சின்னார் வனப்பகுதியில் விட்டனர்.
புதுமணத்தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள். பருவமழை காரணமாக, வெங்காயத்தின் வரத்து குறைந்த நிலையில், வெங்காயவிலை வானை முட்டும் அளவுக்கு கிடுகிடு என உயர தொடங்கியது. இதனால், இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்களுக்கு வெங்காயம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ வெங்காயத்தை பூ செண்டு போல் அலங்கரித்து, மணப்பெண்ணின் தோழிகள் மணமக்களுக்கு பரிசாக அளித்துள்ளனர்.
வனப்பகுதியில் சென்ற காரை கோபத்துடன் விரட்டிய ஒற்றை யானை. ஆப்பிரிக்க நாட்டின், கென்யா வனப்பகுதியில், அம்பொசெலி தேசிய பூங்காவில், மூவாங்கி கிருபாய் என்பவர் வனப்பகுதியை சுற்றி பார்த்த வண்ணம், விலங்குகளை ரசித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒற்றை யானை ஒன்று, கோபங்கொண்டு ஆக்ரோஷமாக, அவரது காரை விரட்டியுள்ளது. இதனை கிருபாய் காருக்கு முன்பாக சென்ற ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்த புகைப்படத்தில், அதீத கோபத்துடன், காரை விரட்டும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி […]
திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் “மனுதர்மம்” சனாதன நூலைத் தடைசெய்ய மத்திய, மாநில அரசுகளை வலிறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘பெரியார் பற்றிய இணையவழி கருத்தரங்கில், நான் பேசியதை துண்டித்து வெளியிட்டிருக்கிறார்கள் என்றும், பெண்கள் எனது 40 நிமிட உரையை முழுமையாக கேட்க […]
ரூ. 3 கோடி வரை செலவழித்து மருத்துவர் ஆகும் ஒருவர் ஏழைகளுக்கு சேவை செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தமிழ்நாட்டில், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கான கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘ தமிழ்நாட்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம். ஒருவர் மருத்துவப் […]
2017-ல் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் விபரம். நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், 2015-2016 முதல் 2018-2019-ம் ஆண்டு வரை, அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர், மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று, மருத்துவ கல்வி இயக்குனரிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து, இதற்கு பதிலளித்துள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம், 2015-2016 மற்றும் 2016-2017-ல் மட்டும், 1,047 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், 2017-ம் ஆண்டில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின், […]
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானதாகும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, உத்திரபிரதேச மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது […]
எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும். மருத்துவ படிப்புக்கான 7.5% இட ஒதுக்கீடு விவாகரத்தில், ஆளுநர் பதில் அளிக்காமல் தாமதம் செய்து வருகிற நிலையில், சென்னை கிண்டியில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் மாளிகை முன்பதாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மு.க.ஸ்டாலின், ‘எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்றும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மசோதா […]
பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கு முஸ்லிம் பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு. முஸ்லீம் பெண்கள் அமைப்பினர், பெண்களின் திருமண வயதை உயர்த்துவதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவின் செயலாளர் பி.கே.நூர்பனா ரஷீத் அவர்கள் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பல வளரும் நாடுகளில் பெண்களின் வயதை 21-லிருந்து 18-ஆக குறைந்துள்ளன. இந்த முடிவை உயிரியல் ரீதியான மற்றும் சமூக தேவையை கருத்தில் கொண்டு எடுத்தனர். […]
அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தடுப்பூசி சோதனையை மீண்டும் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரசை தடுக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட சோதனையின் போது, தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக […]
உலக நாடுகள் ஆபத்தான பாதையில் செல்வதாக எச்சரிக்கை விடுக்கும் WHO. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், பலர் இன்னும் அலட்சிய போக்குடன் தான் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அவர்கள் கூறுகையில், அடுத்து வரவிருக்கும் சில மாதங்கள் […]
மதுரை பட்டாசு ஆலை வெடி விபத் தில், பட்டாசு ஆலை மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள செங்குளத்தை அடுத்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், காட்டுப்பகுதியில் பட்டாசு அலை இயங்கி வருகிறது. தீபாவளி நெருங்கி வருகிற நிலையில், பட்டாசு தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் என 40 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் […]
துருக்கி பொருட்களை புறக்கணிக்கும் சவூதி அரசு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பதாக, சவூதி அரேபியாவில், ஜமால் கசோகி என்ற பத்திரிக்கையாளர், துருக்கி தூதரகத்தில் கொல்லப்பட்டார். இதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், துருக்கியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஜவுளி உள்ளிட்ட பொருட்களும், இறக்குமதி செய்யாமல் தாமதம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில், மார்க்கெட் கடைகளில், அனைத்து துருக்கி பொருட்களையும், புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதன் பின்னணியில் சவூதி அரசு இருப்பதாக கூறப்படுகிற நிலையில், துருக்கியில், […]
தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர். உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட தாடி வைத்து அந்த தாடி உடனே வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் இவரை திடீரென சஸ்பெண்ட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட காவலர் விதிமுறைகளை மீறி உரிய அனுமதியின்றி தாடி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் […]
சீனா என்ற பேரை உச்சரிக்கவே பயப்படும் மோடிக்கு இதையாவது கண்டிக்கும் துணிவிருக்கிறதா? அமெரிக்காவில் வரும் 3-ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக, ஜோ பைடன் போட்டியிடுகிறார். இதனையடுத்து, இவர்கள் இருவரும் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே நேரடி விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது சில குற்றசாட்டுகளை வைத்தார். இதுகுறித்து, […]
காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். விருதுநகர் மாவட்டத்திலுள்ள குந்தலப்பட்டி எனும் இடத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வில் திடீர் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘விருதுநகர் – எரிச்சநத்தத்தில் பட்டாசு […]