சீமராஜா சிவகார்த்திக்கேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் விடுமுறை தினம் முடிந்து இன்று வார நாட்கள் தொடங்கியுள்ளது, இனி தான் இப்படத்திற்காக ரியல் சோதனை உள்ளது. சரி அது இருக்கட்டும், கடந்த 4 நாட்களில் சீமராஜா வசூல் எப்படி என்று பார்ப்போம், சென்னையை பொறுத்தவரை ரூ.3 கோடி வசூல் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் இப்படம் ரூ.26 கோடி வரை 4 நாட்களில் வசூல் […]
சென்னை பரங்கிமலையில் கணவரால் கைவிடப்பட்ட பத்மா என்பவர் பார்வையற்ற தனது மகன் பரத்துடன் வசித்து வந்துள்ளார். போதிய வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வந்த பத்மா பார்வையற்ற மகனை ஆளாக்க சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பத்மா பரத்தின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து முயற்சி செய்துள்ளார்.ஆனால் பத்மா தூக்கிட்டு கயிறு அறுந்து விழுந்ததால் அவர் உயிர்பிழைத்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நடிகர் கேப்டன் ராஜ் கொச்சியில் காலமானார். இவருக்கு வயது 68. தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
நடிகை நிலானி போலீசில் புகார் கொடுத்ததையடுத்து தீக்குளித்த லலித் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிவி சீரியலில் நடித்து வரும் இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தனது ஆண் நண்பர் லலித் குமார் மீது புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லலித் கட்டாயப்படுத்துவதாக அவர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து லலித் குமார் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சைமா என சுருக்கமாக சொல்லப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞருக்கான 7வது சைமா திரைப்பட விருது விழா வருகிற செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் துபாயில் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளை சேர்ந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், நடிகைகள் குஷ்பூ, ராதிகா, கீர்த்தி சுரேஷ், […]
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள ‘ செக்கச்சிவந்த வானம் ‘ வருகிற 27-ம் தத்தி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விலங்குகள் னால வாரியம் இன்னும் க்ளியரன்ஸ் தரவில்லை. இனொரு பக்கம் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு தரவேண்டிய ரூ.3 கோடி பஞ்சாயத்து வேறு ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இன்னும் 10 நாட்கள் இருப்பதால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் […]
கடந்த 7 ஆண்டுகளில் 8 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் வசிப்பவர்களின் 4ல் ஒருவர் வெளிநாட்டவராக உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்ட அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம் இத்தகவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியுரிமை பெற்று குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதால் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொங்கியில் தற்போது 14 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். நான்கு அமெரிக்கர்களில் ஒருவரவெளிநாட்டில் பிறந்தவராக […]
கிண்டியில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன தொப்புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தை சடலம் மீட்பு. குழந்தை சடலத்தை அங்கு போட்டுச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.
ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில் ஹாங் காங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான். டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஹாங் காங், 37.1 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் பவுலர்கள் உஸ்மான் கான் 3 விக்கெட்டுகள் எடுக்க, ஹாசன் அலி மற்றும் ஷதப் கான் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். அதிகபட்சமாக, ஹாங் காண்கின் ஷா 26 ரன்களும், ஐஸாஸ் கான் 27 ரன்களும் […]
இந்தனோஷியா தலைநகர் ஜகார்தாவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் திருப்பூரை சேர்ந்த தடகள வீரர் தருண் அய்யாசாமி 2 வெள்ளிப்பதக்கங்களை வென்று அசத்தினார். அவருக்கு ராம்ராஜ் நிறுவனம் 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கி கவுரவித்துள்ளது. அப்போது பேசிய அவர், தன்னை தானே தயார் படுத்திக்கொண்டு வந்தால் வெற்றிகள் நம் வசமாகும்” என்றார்.
டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியா 0-2 என்ற கணக்கில் சேர்பியாவிடம் தோல்வி அடைந்தது. செர்பியாவின் க்ரல்ஜெவாவில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவில், ராம்குமார் ராமநாதன் 6-3, 4-6, 6-7 (2), 2-6 என 86ம் இடம் வகிக்கும் லாஸ்லோ ட்ஜெரேவிடம் வீழ்ந்தார். மற்றோரு போட்டியில் பிரஜ்நேஷ் குன்னேஸ்வரனை 6-4,6-3, 6-4 என 56ம் இடம் வகிக்கும் டுஷன் லாஜுவிக் வென்றார்.
காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மலை பெய்து வருகிறது. மக்கள் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பலரால் பேசப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பிரபல நடிகர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள். ஹிந்தியில் சல்மான்கான் இதை தொகுத்து வழங்க சீசன் 12 ஆரம்பித்துவிட்டது. இம்முறை விசித்திர ஜோடி என்ற பெயரில் ஜோடியாக போட்டியாளர்கள் களமிறங்குகிறார். அடுத்தாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் போட்டியாளராக உள்ளே வருகிறாராம். இதம் புரோமோ வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஊழல் சர்ச்சையில் இவர் சிக்கியதால் கிரிக்கெட்டிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாழ்வதற்கான சிறந்த பெருநகரங்கள் பட்டியலில், தலனார் டெல்லி 6வது டத்தை பிடித்துள்ளது. க்ளோபல் மெட்ரோ மானிட்டர் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், வாழ்வதற்கு சிறந்த 10 பெருநகரங்கள் பட்டியலில், டில்லி 6வது இடத்தை பெற்றுள்ளது. சிறந்த வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை தரம் வேண்டி ஏராளமான மக்கள் டில்லியை நாடி வருகின்றனர். அதே நேரத்தில், அதிக கற்று மாசுபாடு மற்றும் அதிக பனிமூட்டம், நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. டில்லியின் மக்கள் தொகை 1.8 கோடி. டில்லியின் மக்கள் […]
ரஜினியுடன் நடித்த படையப்பா படம் ரம்யா கிருஷ்ணனின் திரை பயணத்தில் முக்கியமான படம். அதன்பிறகு ராஜமௌலியின் பாகுபலி, பாகுபலி -2 படங்களிலும் அவர் நடித்த ராணி, சிவகாமி வேடம் அவரை மீண்டும் பேச வைத்தது. இந்நிலையில், தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் மீண்டும் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. கடந்த வியாழனன்று வெளியான இந்த படத்தில் அவர், நாகசைதன்யாவுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். இது போன்ற அழுத்தமான அம்மா வேடங்களில் நடிக்க ஆர்வமாய் […]
சிவகார்த்திக்கேயனின் சீமராஜா திரையரங்குகளில் மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வசூல் விவரங்கள் வெளியாக சிவகார்த்திக்கேயன் ரசிகர்களும் கொண்டாட்டம் போட்டு வருகின்றனர். தற்போது சிவகார்த்திக்கேயனினி கடைசி நான்கு படங்களின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் விவரத்தை பார்ப்போம். சீமராஜா – 9.80 கோடி வேலைக்காரன் – 7.40கோடி ரெமோ – 6.50 கோடி ரஜினி முருகன் – 4.95 கோடி இப்படி ஒவ்வொரு படத்துக்கும் பாக்ஸ் ஆபிசில் கலக்கி வரும் சிவகார்த்திக்கேயனை அவரது ரசிகர்கள் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் […]
நடிகர் அஜித் என்ற மனிதருக்கு கீழ் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தன்னுடைய ஆசை நாயகன் ரசிகர் மன்றங்களை எடுத்தாலும் விசுவாசமாக இருந்து வருகிறார்கள். இப்பொது அவர் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து விசுவாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அஜித் பற்றியும் அவரது ரசிகர்கள் பற்றியும் பிரபலங்கள் சொன்னது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. என்னை அறிந்தால் படத்தின் போது நடந்த விஷயத்தை அருண் விஜய் ஒரு பேட்டியில் நாங்கள் அதாரு அதாரு பாடலை […]
தமிழ் சினிமாவில் அனைவராலும் ரசிக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பு மட்டுமல்ல இவரின் பேச்சும் பலராலும் அதிகம் ரசிக்கப்பட்டு பகிரப்படுகிறது. இவரின் மகன் நானும் ரவுடி தான் படத்தில் நடித்திட்டார். மகளும் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இவரின் மனைவியின் புகைப்படத்தை விஜய் சேதுபதி வெளில்யிடாமல் இருந்தார். தற்போது இவரின் கூடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் இவரின் மனைவி மலையாளியாம். கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த இவரின் மனைவி ஜெஸ்ஸியை 20 வயதில் திருமணம் செய்துள்ளார். இவர் துபாயில் […]
ராகவா லாரன்ஸ் தான் நடித்த பேய் படங்களின் மூலம் பிரபலமானவர். நடன இயக்குனரான இவர் ஆதரவற்றவர்களுக்கு அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதன் மூலம் பல குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கான நிதியுதவி செய்து உயிரை காப்பாற்றி வருகிறார். அவருக்கு அன்னை தெரசாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அன்னை தெரசா விருது கொடுக்கப்பட்டது. அப்போதுமேடையில் பேசிய அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் சிகரெட், மது என எந்த பழக்கமும் இல்லை. நடன இயக்குனரான பின் நண்பர்களின் வற்புறுத்தலால் […]