ராகவா லாரன்ஸ் தான் நடித்த பேய் படங்களின் மூலம் பிரபலமானவர். நடன இயக்குனரான இவர் ஆதரவற்றவர்களுக்கு அறக்கட்டளை நடத்தி வருகிறார்.
அதன் மூலம் பல குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கான நிதியுதவி செய்து உயிரை காப்பாற்றி வருகிறார். அவருக்கு அன்னை தெரசாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அன்னை தெரசா விருது கொடுக்கப்பட்டது.
அப்போதுமேடையில் பேசிய அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் சிகரெட், மது என எந்த பழக்கமும் இல்லை. நடன இயக்குனரான பின் நண்பர்களின் வற்புறுத்தலால் எப்போதாவதுஹ் மது அருந்துவேன். இப்பொது அதுவும் இல்லை.
ஆனால் மிகவும் டென்ஷனா நேரத்தில் கொஞ்சம் ஒயின் அருந்துவேன். இனி இந்த விருதை பெற்றதற்கு மரியாதை கொடுக்கும் விதமாக ஒயின் குடட் அருந்த கூடாது என முடிவெடுத்து விட்டேன்.