நாளை மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ” மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து பொருள்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சீரமைப்பு, செயல்பாடு மாற்றியமைத்தல் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. புதிய தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு சிறப்பான அடித்தளத்தை இந்தியா அமைந்துள்ளது. மத்திய அரசு சிறப்பான […]
குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து நாளை மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உரையாற்றுகிறார். நாடாளுமன்ற பணியாளர் செங்கோலை ஏந்தியபடி செல்ல குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் நாடாளுமன்றம் வந்தார். அதன்படி புதிய நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் முர்மு ” நாட்டின் […]
திமுக எம்.பி ஆ.ராசா எம்.ஜி.ஆர்அவர்களை இழிவாக பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்.பி ஆ.ராசாவின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைத்தளமான எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்” இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் , என்றும் இன்றும் மக்கள் மனங்களில் […]
கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைபடங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் தொடர்பாக மாலத்தீவு அதிபா் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 3 அமைச்சா்கள் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவை பற்றியும் சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டனா். இதைத் தொடா்ந்து, இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு […]
நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகின்றனர். இதற்கிடையில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் வரும் பிப்ரவரி 3-ம் தேதி […]
நாடாளுமன்ற இரு அவைகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர்நாளை தொடங்கவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில் ” நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் […]
சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மனு மீதான விசாரணை பிப்ரவரி 6-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியில் கடந்த 2001முதல் 2006 சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி இருந்தார். அப்போது அவரும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டது. இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் […]
சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்ற அறிவுறுத்தல் படி இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சி இணைந்து போட்டியிட்டது. இந்தியா கூட்டணியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன. சண்டிகரில் மேயர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் […]
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “ஸ்பெயின் நாட்டின் தலைநகரான ‘மாத்ரித்’ நகருக்கு நான் வருகை தருவது இதுவே முதல் முறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிகமுக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன். எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு […]
ஜார்கண்ட் மாநிலத்தில் நில மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பணமோசடி வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 முறை சம்மன் அனுப்பி உள்ளது. அதில் 8-வது முறையாக ஜனவரி 13 ஆம் தேதி, அமலாக்க இயக்குனரகம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பியது. ஜனவரி 16 முதல் ஜனவரி 20-க்குள் நில மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை சம்மனுக்கு பதிலளித்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் […]
பழைய டென்ஷன் திட்டம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை டிஐபி வளாகத்தை முற்றுகையிட முயன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்தனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.! ஜனவரி 7ஆம் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 01 பிப்ரவரி 2024 அன்று பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு தனது குறுகிய பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை வெறும் 87 நிமிடங்களில் வாசித்தார். இந்திய வரலாற்றிலேயே மிக […]
இந்திய கடற்படை 24 மணி நேரத்தில் வெற்றிகரமாக இரண்டாவது கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையை தடுத்துள்ளது. சோமாலியாவை சேர்ந்த 11 கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த மீன்பிடி கப்பலான அல் நயீமி மற்றும் 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. நேற்று ஈரானை சார்ந்த 17 பேர் ஏடன் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை சிறைபிடித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹைதராபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. அதே நேரத்தில், ஒரு புறம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையும் பாதிக்கப்பட்டது. மறுபுறம் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் விக்கெட் கீப்பர் கே.எல் ராகுல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. […]
சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இமான் என்ற மீன்பிடி கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா வெற்றிகரமாக மீட்டுள்ளது. ஈரான் நாட்டுக் கொடியுடன் மீன்பிடிக் கப்பல் ஒன்று கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்தது. உடனே அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா சம்பவ இடத்திற்கு சென்றது. அங்கு இருந்த கொள்ளையர்களை இந்தியப் பாதுகாப்புப் படையினர் சோமாலியாவை நோக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஐஎன்எஸ் […]
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் , திமுக, ஆம்ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்திய கூட்டணி நேற்றுவரை வங்காளத்திலும், பஞ்சாபிலும் மட்டுமே பலவீனமாக காணப்பட்டது, ஆனால் இப்போது பீகாரில் அதன் பலம் குறைந்துள்ளது. இவ்வாறான நிலையில் இந்திய கூட்டணி எதிர்காலத்தில் என்ன, என்ன மாதிரியான வியூகத்தை மேற்கொள்ளப் போகிறது என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ […]
ஜோர்டானில் சிரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். அதே நேரத்தில், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காஸா போர் தொடங்கிய பிறகு, மத்திய கிழக்கு நாடுகளில் எதிரி படைகளால் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நேற்று ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் காயமடைந்ததற்கும் அமெரிக்கா […]
உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது ரெயில்வே பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர். 2004-09 காலகட்டத்தில் ரெயில்வே பணிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இந்நிலையில், நில மோசடி வழக்கில் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை நடத்தவுள்ளது. இதைத்தொடர்ந்து, […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2021-ல் முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆய்வு பணிக்காக பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி முன்னாள் ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்பி கண்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தினர். மேலும், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி […]