2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் , திமுக, ஆம்ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்திய கூட்டணி நேற்றுவரை வங்காளத்திலும், பஞ்சாபிலும் மட்டுமே பலவீனமாக காணப்பட்டது, ஆனால் இப்போது பீகாரில் அதன் பலம் குறைந்துள்ளது. இவ்வாறான நிலையில் இந்திய கூட்டணி எதிர்காலத்தில் என்ன, என்ன மாதிரியான வியூகத்தை மேற்கொள்ளப் போகிறது என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை குறித்து காங்கிரஸ் தலைவர் பிரமோத் கிருஷ்ணம் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியில் மிகச் சிறந்த மற்றும் புத்திசாலி தலைவர்கள் உள்ளனர். ஒருபுறம், அனைத்து அரசியல் கட்சிகளும் 2024 தேர்தலுக்கு தயாராகி வருகின்றன, மறுபுறம், ஒட்டுமொத்த காங்கிரசும். கட்சி அரசியல் சுற்றுலா செய்கிறார்கள். உண்மையில், 2024 க்குப் பிறகு, 2029 தேர்தலுக்கு நாங்கள் தயார்படுத்திக் கொள்கிறோம் என்று கூறினார்.
வாழ்க்கையில் போட்டி இருக்க வேண்டும்.. ஆனா ஆரோக்கியமானதாக.. – பிரதமர் மோடி
மேலும், 2024 தேர்தலுக்கு நாங்கள் தயாராகி இருந்தால், இது நடந்திருக்காது. இந்திய கூட்டணி குறித்து அவர் கூறுகையில், “இந்திய கூட்டணி, துவக்கத்தில் இருந்தே, தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பின், ஐ.சி.யூ.,க்கு சென்றது. அதன் பின், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டது. நேற்று, நிதிஷ்குமார் தகனம் செய்தார்” என கூறினார்.
ஜனவரி 14-ஆம் தேதியன்று மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி நாகாலாந்து, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை கடந்து இன்று பீகார் மாநிலத்துக்குள் நுழைந்துள்ளார். பீகாரில் ராகுல் காந்தி நுழைந்தபோது மாநில தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். 2020 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு ராகுல் காந்தி பீகார் செல்லும் முதல் பயணம் இதுவாகும்.
