தொடர்ந்து 2வது நாளாக குறைந்தும் மகிழ்ச்சி இல்லா தங்கம் விலை!

Published by
கெளதம்

Gold Price : தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது, அனாலும் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி இல்லை என்றே சொல்ல வேண்டும்.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,235ஆகவும், சவரன் தங்கம் ரூ.49,880ஆகவும் அதிகரித்து புதிய உச்சம் தொட்டது. ஆனால், நேற்று கிராமுக்கு ரூ.35க்கும் சவரனுக்கு ரூ.280ஆகவும் குறைந்தது. இதையடுத்து 2வது நாளாக இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,185 ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னையில் (23.03. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.6,185க்கும் விற்பனை செய்யயப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் (22.03. 2024) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.49,600-க்கும் கிராமுக்கு ரூ.6,200-க்கும், விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ. 2 குறைந்து ஒரு கிராம் ரூ.79.50 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.79,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

31 minutes ago

தலைமை காஜி மறைவு…விஜய் முதல் இபிஎஸ் வரை இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…

1 hour ago

தோனிக்கு இதுதான் கடைசி போட்டி…பண்டிகை மாதிரி கொண்டாடுங்க! வேண்டுகோள் வைத்த முகமது கைஃப்!

அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…

2 hours ago

ED-க்கும் பயமில்லை..பிறகு எதுக்கு உதயநிதியின் கூட்டாளிகள் தலைமறைவு? நயினார் நாகேந்திரன் கேள்வி!

சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…

3 hours ago

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையில் ரொனால்டோ? ஸ்கெட்ச் போடும் முக்கிய அணிகள்!

அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…

3 hours ago

மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றா செயல்படனும்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று…

4 hours ago