Indian Stock Market [File Image]
மும்பை : இந்திய பங்குசந்தையில், கடந்த வாரம் ஏற்பட்ட கடும் சரிவிற்கு பிறகு இந்த வாரத் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தை சற்று உயர்வடைந்து சாதகமாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
அதன்படி, நிஃப்டி 69 புள்ளிகள் உயர்ந்து 25,084 என்ற புள்ளிகளில் துவங்கியது. அதே நேரம் சென்செக்ஸ் 238 புள்ளிகள் அதிகரித்து 81,927 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் ஜியோ ஃபைனான்ஸ் (Jio Finance), IDC (International Data Corporation) ஆகிய நிறுவனத்தின் பங்குகள் 2% உயர்ந்திருந்தது.
இதனுடன் டாடா மோட்டார்ஸ், இன்ஃபி, அல்ட்ரா டெக் சிமெண்ட், கோடாக் வங்கி போன்ற நிறுவனத்தின் பங்குகளும் உயரத்தில் இருந்து வருகிறது. அதிலும், தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்டியில், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், எச்சிஎல் டெக் மற்றும் ட்ரெண்ட் போன்ற நிறுவனங்களின் பங்குங்கள் உயரத்தில் லாபம் ஈட்டி வருகிறது.
பங்குச்சந்தை ஒரு வாரத்திற்கு பிறகு சற்று உயர்வை அடைந்தாலும், ஒரு சில நிறுவனங்களை கவனமாக முதலீடு செய்யுமாறு பங்குச்சந்தை வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்படி, குறிப்பாக ஃபைனான்ஸ் தொடர்பாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் நிதானமாக யோசனை செய்து முதலீடு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதன்பின், ஹெச்டிஎஃப்சி வங்கி, டைட்டன், ஆர்இசி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கோத்ரெஜ் போன்ற பங்குகள் மீது வர்த்தகம் செய்யும் போதும் கவனமாக கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் அதாவது 3 வாரமாக நன்கு லாபம் ஈட்டி வந்த இந்திய பங்குச்சந்தைகள், கடந்த ஒரு வாரமாக எழுச்சிப் பெறாமலே இருந்து வந்தது. அதற்கு மிக முக்கிய காரணம் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் தான்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தொடங்கியுள்ள இந்த போரின் காரணமாக இந்திய பங்குச்சந்தை உட்பட உலக அளவில் பங்குசந்தைகளில் பெரிதலைவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தியில் பெரும் பங்காற்றி வரும் ஈரான் தற்போது இஸ்ரேல் மீது நடத்தி இருக்கிறது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல், ஈரானின் எண்ணெய் கிடங்கு உள்ளிட்டவற்றை தாக்கத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி ஒரு தாக்குதல் நடந்தால், ஈரான் நாட்டில் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்து வரும் இந்தியா உட்பட பல நாடுகளில் பொருளாதாரத்தில் பெரும் அளவிற்கு மாற்றம் நிலவக்கூடும் என்ற அச்சம் இருந்து வருகிறது.
தற்போது, அப்படி ஒரு போர் ஏற்படாமல் இருக்க ஒரே தீர்வு உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் மற்றும் ஈரான் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் போர்நிறுத்தம் ஏற்படும்.
மேலும், போர் நின்றுவிட்டால் இந்திய பங்குசந்தையில் சிறுதளவு சரிவை கண்டாலும், சீராகவே வர்த்தகம் நடைபெறும் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால், உலகளவில் நடைபெற்று வரும் வர்த்தகம் தொடர்பான நிகழ்வை பங்குச்சந்தை வல்லுநர்கள் கண்காணித்து கொண்டும் வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…