பங்குச்சந்தை : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி போர்ட்ஸ், அதானி கியாஸ், அதானி வில்மர், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமெண்ட்ஸ் என பல்வேறு அதானி பங்குகள் 9 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை குறைந்தது.
இதனை தொடர்ந்து, இன்றைய தினம் காலை மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,602.23 புள்ளிகள் உயர்ந்து 73,681.27 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. அதே போல தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்ட்டி 494.15 உயர்ந்து 22,378.65 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றுது.
இந்நிலையில், இன்றை நாள் வர்த்தகத்தின் முடிவில், நேற்று ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து மீண்டு, 30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 2,303.19 புள்ளிகள் உயர்ந்து 74,382.24-ல் நிலைபெற்றது. பகலில், 2,455.77 புள்ளிகள் பெரிதாகி 74,534.82 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் வீழ்ச்சிக்கு பின் உயர்ந்த அதானி கிரீன் பங்கு 11% உயர்ந்துள்ளது.
அதன்படி, அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் 11.01 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 8.59 சதவீதமும், அம்புஜா சிமெண்ட்ஸ் 7.47 சதவீதமும், குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் 6.02 சதவீதமும் பிஎஸ்இயில் உயர்ந்தன.
ஏசிசி பங்கு 5.20 சதவீதம் உயர்ந்தது, என்டிடிவி 3.26 சதவீதம் உயர்ந்தது, அதானி டோட்டல் கேஸ் 2.67 சதவீதம் உயர்ந்தது, அதானி வில்மர் 0.77 சதவீதம் முன்னேறியது, அதானி பவர் 0.32 சதவீதம் உயர்ந்தது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…