தொடர் சரிவில் தங்கம் விலை.. சவரனுக்கு என்ன விலை தெரியுமா?

தங்கம் விலை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, தொடர்ந்து சரிந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (30-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,385க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசு குறைந்து ரூ.89க்கும், கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (29-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,320க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,415க்கும் விற்பனையானது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025