‘ஏறுமுகத்தில் தங்கம்’ …சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு! கவலையில் இல்லதரிசிகள்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.57,280-க்குவிற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Gold Price

சென்னை : நேற்றைய நாள் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,090க்கு விற்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்றைய நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.57,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று சற்று குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று இப்படி விலை அதிகரித்தது இல்லதரிசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Gold Price Card
Gold Price Card [File image]
அதேபோல், வெள்ளி விலை கடந்த 3 நாட்களாக விலை மாறாமல் விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று 1 கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.61,320க்கும், ஒரு கிராம் ரூ 7,665-க்கும் விற்பனையாகி வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்