தொடர் ஏற்றம் காணும் தங்கம் விலை.! வாங்கவே முடியாது போலயே…

தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை உயர்ந்ததை போல இன்றும் சற்று உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றும் சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.44,400-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.5,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.81.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.