என்னதான் குறைந்தாலும் சந்தோசமே இல்லை! குறைந்தது தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

Published by
கெளதம்

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. நேற்று ரூ.560 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. என்னதான் குறைந்தாலும் இல்லத்தரசிகள் முகத்தில் சந்தோசமே இல்லை என்றே சொல்ல வேண்டும்.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (17-05-2024)  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,770க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.92.50க்கும், ஒரு கிலோ ரூ.92,500க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (16-05-2024)22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.92.50க்கும், கிலோ வெள்ளி ரூ.1,500 அதிகரித்து ரூ.92,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

2 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

3 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

4 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

4 hours ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

6 hours ago