வணிகம்

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 62,900 புள்ளிகளாக வர்த்தகம்..!

Published by
செந்தில்குமார்

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 161.69 புள்ளிகள் சரிந்து 62,900 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,650 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்தது. இன்றைய வர்த்தக நாளில் 62,738 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 161.69 புள்ளிகள் அல்லது 0.17% என சரிந்து 62,900 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 51.50 புள்ளிகள் அல்லது 0.28% சரிந்து 18,557 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 62,792 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,599 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.

அல்ட்ராடெக் சிமெண்ட், ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ் லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், விப்ரோ லிமிடெட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன

Published by
செந்தில்குமார்

Recent Posts

பாமகவிலிருந்து 3 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்! என்ன காரணம்?

சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…

29 minutes ago

பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

1 hour ago

மீண்டும் மீண்டுமா? இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…

2 hours ago

இனிமே இதில் ChatGPT போன்ற AI பயன்படுத்தக் கூடாது! கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…

3 hours ago

“ஒட்டு கேட்கும் கருவி விவகாரத்தில் சந்தேகம்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…

4 hours ago

INDvsENG : இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி : காயம் காரணமாக விலகும் அர்ஷ்தீப் சிங்?

மான்செஸ்டர் : 2025 ஜூலை 20 அன்று, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்துக்கு…

5 hours ago