ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ திரைப்பட இயக்குநர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து சுகுமாரை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தொடர்புடைய இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது. சுகுமாரின் வீட்டில் சோதனைகள் அதிகாலையில் தொடங்கி பல மணி நேரம் நீடித்ததாக சொல்லப்படுகிறது. இந்த ரெய்டு குறித்து இயக்குநர் சுகுமார் இதுவரை பதில் அளிக்கவில்லை. நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா […]
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக அமைந்தது என்றே சொல்லலாம். எனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு முழு நேர திரைபடத்தில் நடிக்கிறார் என்றால் நிச்சயமாக அந்த படம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பற்றி சொல்லியா தெரியவேண்டும். விக்ரம் படத்தில் நடிப்பதற்கு முன்பே சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘இரும்புக்கை மாயாவி’ என்கிற படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், சில […]
தெலுங்கானா: சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகனான சாம்பாஜி மகாராஜின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படம் ‘சாவா’. இந்தப்படத்தை பாலிவுட் இயக்குனர் லக்ஷ்மண் உத்தேகர் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தை தினேஷ் விஜனின் மடாக் பிலிம்ஸ் தயாரிக்க, படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சத்ரபதி சாம்பாஜியின் மனைவியான ராணி யேசுபாய் கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நடிகர் விக்கி கௌஷல், மராட்டிய மன்னரும் போர்வீரருமான சத்ரபதி சம்பாஜி மகாராஜாக நடிக்கிறார். இந்த படம் 14 பிப்ரவரி 2025 அன்று […]
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ஐந்து நாட்களுக்குப் பிறகு இன்று மும்பை லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 16ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு திருட வந்த திருடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினான். இதில் சைஃப் அலிகானுக்கு முதுகுத்தண்டில் பலத்தக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், மூன்று நாள் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, தாக்குதல் […]
கேரளா : மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விநாயகன் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மிகவும் ட்ரெண்ட் ஆகி விட்டார். இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்புக்கு அவருக்கு தொடர்ச்சியாக பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரும் ஆனால், அடிக்கடி சர்ச்சைகளில் அவர் சிக்கி கொண்டு இருப்பதால் பட வாய்ப்புகளும் குறைந்துவிடும் என கூறப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஆண்டு ஹைதராபாத் விமான ஊழியர்களிடம் அவர் சண்டையிட்டதாக கூறி அவரை காவல்துறை கைது செய்திருந்தனர். […]
கர்நாடகா: இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது மரங்களை வெடி வைத்து வெட்டியதாக படக்குழுவினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சூப்பர்ஹிட் திரைப்படமான ‘கந்தாரா’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஆக்ஷன் காட்சி, சுவாரசியமான கதை மற்றும் ரிஷப் ஷெட்டியின் […]
சென்னை : வருமான வரித்துறை கடந்த சில நாட்களாகவே அதிரடியான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று ஒரே நாளில் அஜித் விஜய் படங்களின் தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எந்தெந்த தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர் என்பது பற்றி விவரமாக பார்ப்போம்.. வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய்யை வைத்து வாரிசு திரைப்படத்தினை தயாரித்திருந்த தயாரிப்பாளர் தில் ராஜுவின் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியான சோதனையில் ஈடுபட்டனர். ஸ்ரீ […]
சென்னை : இசைஞானி இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைப்பது குறைந்துள்ளது என்றாலும் அடிக்கடி சில இடங்களில் இசைக்கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வெளி மாவட்டத்தில் இசைகச்சேரி நடத்தினார். ஜனவரி 17-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் அண்ணாமலை நகர், முத்து ரோடு பகுதியில் இளையராஜாவின் இசைக்கச்சேரி பிரமாண்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 20,000 மக்கள் அங்கு வருகை தந்திருந்தார்கள். அங்கு வந்தவர்களுக்கு மனதிற்கு நெருக்கமான பாடல்களை பாடி இளையராஜாவும் ரசிகர்களை இசை […]
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரிஷா, அர்ஜுன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான ‘சவடிக்கா’ பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும், அப்பாடல் ரில்ஸ் வழியாகவும் அதிக அளவு பார்வையாளர்களை கவர்ந்தது. இதனை எடுத்து இரண்டாவது […]
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், திடீரென படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு பதிலாக வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ரிலீஸ் தேதி தள்ளி செல்வதற்கு முக்கியமான காரணமே அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாகும் என்பதால் தான். திடீரென, விடாமுயற்சி படமும் […]
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு படத்தை கொடுக்க ரெடியாகி இருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். எதற்காக இப்படி சொல்கிறோம் என்றால் குட் நைட் படத்தை போலவே குடும்ப கதையை வைத்து அவர் அடுத்ததாக நடித்துள்ள குடும்பஸ்தன் படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி என்பவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஒரு குடும்பஸ்தன் […]
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது என்றே சொல்லலாம். அதன்பிறகு வீட்டிற்குள் சில சண்டைகள் நடந்த நிலையில்,அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ச்சிக்கு அதிகமான வரவேற்பு கிடைத்த காரணத்தால் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது. நிகழ்ச்சியை விரும்பி பார்க்க ஆரம்பித்த பலரும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களுடைய ஆதரவுகளை தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். ஒரு பக்கம் முத்துவுக்கும், ஒரு பக்கம் பவித்ராவுக்கும், மற்றோரு […]
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் “மதகஜராஜா” திரைப்படம் 12 வருடங்களுக்கு பின், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில், சென்னையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அப்பொழுது, படம் வெற்றி குறித்து சில மீம்ஸ்கள் ஸ்க்ரீனில் போட்டு நடிகர்களிடம் அது பற்றி கருத்துக்கள் கேட்கப்பட்டது. அப்பொழுது, மூன்று தலை கொண்ட டிராகன் கார்டூன் வடிவில் அமைக்கப்பட்ட புகைப்படத்தை போடு காமித்தனர். இதை […]
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ” திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை நாங்கள் மாற்றம் செய்கிறோம் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது. நிறுவனம் கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி “நிலவுக்கு என்னடி என் மேல் கோபம் ” திரைப்படம் சில காரணங்களால் பிப்ரவரி 6 ரிலீஸ் […]
துபாய் : நடிகர் அஜித் சினிமாத்துறையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் அதற்கு அடுத்தபடியாக கார் பந்தயங்களில் கலந்துகொன்டு விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடம் பிடித்தது. அஜித்தின் அணி 3-வது இடத்தில் பிடித்ததை […]
சென்னை : 12 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு குடும்போதோடு பார்த்து சிரிக்க அற்புதமான படமாக இந்த படம் அமைந்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் எவ்வளவு சிரித்தார்களோ அதே அளவுக்கு வேதனையும் அடைந்தார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், சந்தானம் இப்போது […]
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்திய நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து, பாந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்து பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்த நபரை தடுத்தபோது சைஃப் அலிகான் மீது தாக்குதலில் ஈடுபட்ட அவர், கழுத்து, முதுகெலும்பில் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். தற்போது சைஃப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாக்குதல் […]
மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல் தொடர்பாக மும்பை போலீசார் 20 குழுக்களை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். ஏற்கனவே 10 குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது 20 குழுக்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மும்பை பாந்த்ராவில் உள்ள அவருடைய வீட்டில் இரவில் அவர் தூங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து அவரை கொடூரமாக கத்தியை வைத்து குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவில் சயிப் அலிகான், தன் […]
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியமான காரணமே மும்பை பாந்த்ராவில் உள்ள அவருடைய வீட்டில் இரவில் அவர் தூங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து அவரை கொடூரமாக கத்தியை வைத்து குத்தினார். சரியாக சயிப் அலிகான் வீட்டில் இரவில் ஒரு 2.30 மணிக்கு திருடன் ஒருவன் புகுந்திருக்கிறார். அந்த திருடனை உடனடியாக பார்த்த […]
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக சில பல காரணங்களால் அந்த தேதியில் படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. எனவே, அஜித் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஏமாற்றத்துடன் படம் ரிலீஸ் ஆகும் அன்று தான் நமக்கு பொங்கல் என்று பேசிக்கொண்டு மனதை தேத்திக்கொண்டார்கள். இருப்பினும், ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதற்கு பிறகு புது ரிலீஸ் தேதி எப்போது என தெரியாமல் அந்த அப்டேட்டுக்காகவும் ரசிகர்கள் […]