துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் விளையாடி வருகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா அணி “நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம்” என பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக பேட்டிங் தேர்வு செய்தது போல தொடக்கமும் அசத்தலாக அமைந்தது என்று சொல்லலாம். இந்தியாவுக்கு எதிராக பயங்கர பார்ம் வைத்திருக்கும் ட்ராவிஸ் […]
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் விளையாடுவார் என்று கூறலாம்.இதுவரை இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 9 ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவர் விளையாடி இருக்கிறார். 9 போட்டிகளில் 345 ரன்கள் ஒரு சதமும் அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக அவர் பார்மில் இருப்பதன் காரணமாக இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் எப்படி விளையாடப்போகிறார் என்கிற […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் மோதுகிறது. இந்த போட்டியை அரையிறுதி போட்டி என்பதை தாண்டி பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்படுவதற்கு காரணமே, 2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? என்பது தான். ஏனென்றால், 2011 உலகக்கோப்பை காலிறுதியை அடுத்து இந்திய அணி ஐசிசி நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி போட்டி என்பதை தாண்டி இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்க காரணமே இந்த போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் இந்திய அணியும் மோதுகிறது என்பதால் தான். இந்த இரண்டு அணிகளும் மோதுகிறது என்றாலே போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்படி தான் இந்த போட்டிக்கும் இருந்து வருகிறது. இந்த போட்டியின் மூலம் ஆஸ்ரேலியா அணிக்கு இந்திய அணி […]
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் அரையிறுதியில் குரூப் ஏ-வில் முதலிடம் பிடித்த இந்தியா மற்றும் குரூப்-பியில் 2ஆம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் மோத உள்ளன. வழக்கம் போல இந்த போட்டியும் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளுக்கும் ஐஐசி கோப்பை போட்டிகளில் நாக் அவுட் வெற்றி -தோல்வி கணக்கீடு என பார்த்தல் மொத்தம் 7 போட்டிகளில் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை (மார்ச் 4 ஆம் தேதி) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக தனது வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. எனவே, இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது இந்திய அணி வலுவாக வெற்றி பெறுவதைக் கண்டு, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம் தேதி) நடைபெறுகிறது. நேற்றைய தினம் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா அணி, நாளை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று நியூசிலாந்துடன் இந்தியா மோதியது. முதலில் பேட் செய்த இந்தியா 249 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்கள் குவித்தார். 250 ரன்கள் இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு […]
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கடந்த ஆண்டு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது என்று சொல்லலாம். அடுத்த ஆண்டு அதாவது இந்த ஆண்டும் அவர் கொல்கத்தா அணிக்காக கேப்டனாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை அணி விடுவித்தது. எனவே, அவர் கொல்கத்தா அணியில் இல்லை என்ற காரணத்தால் எந்த வீரர் கேப்டனாக வழிநடத்தப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்தது. ஒரு பக்கம் […]
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள் எழும்பியது. ஒரு பக்கம் கே.எல் ராகுல் விளையாடவேண்டும் எனவும் மற்றொரு பக்கம் ரிஷப் பண்ட் விளையாடவேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது. இறுதியாக கம்பீர் கே.எல் ராகுலை விளையாட வைப்பதில் உறுதியாக இருந்த காரணத்தால் அவருக்கு விளையாட வாய்ப்புகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட வாய்ப்பை ஒரு சில சமயங்களில் கே.எல் ராகுல் சரியாக பயன்படுத்தினாலும் சில போட்டிக்களில் பேட்டிங்கில் […]
துபாய் : இந்த ஆண்டின் (2025) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலே தடுமாறியது என்றே சொல்லலாம். முதல் இன்னிங்ஸ் : தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து […]
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டியில் மோதி வருகிறார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியா அணி தொடக்கத்திலே தடுமாறியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதற்கு பிறகு […]
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2, 2025) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் தேர்வு செய்துள்ளது. வீரர்கள் விவரம் இந்தியா : ரோஹித் சர்மா (c), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (wk), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் […]
டெல்லி : கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு என்று சொல்லலாம். இரண்டு அணிகள் மோதும் போட்டியை எல் கிளாசிகோ என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இரண்டு அணிகளும் மோதும் போட்டி பரபரப்பாக யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். இதுவரை இந்த இரண்டு அணிகளும் 207 போட்டிகள் மோதிய நிலையில் பாகிஸ்தான் 88 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. இந்தியா 75 முறை வெற்றிபெற்றுள்ளது. மொத்தமாக பாகிஸ்தான் […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில் மோதியது. இந்த தொடரில் ஏற்கனவே இரன்டு போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறிவிட்ட நிலையில், தென்னாபிரிக்கா அணி 1 போட்டியில் வெற்றிபெற்று தகுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இருப்பினும் இன்று நடைபெறும் போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் நோக்கத்தோடு டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை மட்டும் தான் அதிரடியாக தேர்வு […]
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரன்டு போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறிவிட்டது. இருப்பினும் இந்த தொடரின் கடைசி போட்டியில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி ஆறுதல் வெற்றியாவது பெற்று ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வாய்ப்புகள் குறைவு என்கிற வகையில் எதிரணிக்கு டார்கெட் வைத்துள்ளது. இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் […]
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதுகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரன்டு போட்டியில் தோல்வி அடைந்து இங்கிலாந்து வெளியேறிவிட்ட நிலையில், தென்னாபிரிக்கா அணி 1 போட்டியில் வெற்றிபெற்று தகுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இன்று நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றாலும் பெறாவிட்டாலும் கூட தகுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதே சமயம் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியிலாவது […]
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. இதில் இங்கிலாந்து அணி மட்டுமே அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று பெரும் வாய்ப்பை இழந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்து அரையிறுதிக்கு யார் முன்னேறுவார்கள் என எதிர்நோக்கப்பட்டது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பெரிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை […]
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. லாகூர் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். மழையால் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இந்நிலையில், 4 புள்ளிகளை அடைந்த குரூப் B பிரிவில் முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது. தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 […]
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் வெற்றி பெரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தான் அணி வீரர்களை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட் எடுத்தாலும் […]
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், தற்போது டாஸ் போடபட்டது. இருப்பினும், பிப்ரவரி 28 அன்று லாகூரில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் போட்டி தொடங்கும் நேரத்தில் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. இந்தப் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு […]