நடிகர் கார்த்தி தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து குக்கூ படத்தை இயக்கிய ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும், கூட அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தி -ராஜு முருகன் இணையும் அந்த படத்திற்கு “ஜப்பான்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் […]
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா , சித்தார்த், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜிகர்தண்டா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. “ஜிகர்தண்டா” படம் வெளியாகி சமீபத்தில் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி “ஜிகர்தண்டா – 2′ படத்துக்கான எழுத்துப்பணிகள் தொடங்கிவிட்டதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார். இதையும் படியுங்களேன்- எல்லாம் முடிந்ததும் சகோதரியாக ஆயிடுவேன்… […]
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவா நடித்துள்ளது “தி லெஜண்ட்” திரைப்படம் கடந்த ஜீலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜெர்ரி&ஜேடி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபு, நாசர், விவேக், யோகி பாபு, ஊர்வசி ரவுத்தேலா, என பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதையும் படியுங்களேன் – எவ்வளவு கொடுத்தாலும் தி லெஜண்ட் […]
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என 4 சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக மாறிவிட்டார். கடைசியாக இவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ள நிலையில், […]
இயக்குனர் ஜலீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிப்பில் வெளியான 50-வது திரைப்படம் “மஹா”. இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸாகவில்லை. இறுதியில், ஒரு வழியாக படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க பல ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஏனெனெனில், இப்படத்தில் நடிகர் சிம்புவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாகவே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக மதுரையை சேர்ந்த சிம்பு […]
நடிகர் சூர்யா – இயக்குனர் வெற்றிமாறன் இணைந்துள்ள திரைப்படம் “வாடிவாசல்”. இந்த படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஏனென்றால், வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பிறகே வாடிவாசல் படம் தொடங்கும் என தெரிகிறது. கடந்த சில […]
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் “வாரிசு” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான 4-ஆம் கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், கூட நம்ப தக்க சினிமா வட்டாரங்கள் லோகேஷ் தான் தளபதி […]
நடிகர் ரன்பீர் கபூர், நடிகை அலீயா பட் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “பிரம்மாஸ்திரம்”. இந்த படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி என்பவர் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ப்ரீதம் என்பவர் இசையமைக்கிறார். ஹிந்தியில் மிகப் பெரும் பொருட்செலவில் “பிரமாஸ்திரா” என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் பிரம்மாஸ்திரம் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜூனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 3 பாகங்களாக உருவாகும் இந்த […]
ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கியும், நடித்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமாகி வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி, நடித்த, ஒத்த செருப்பு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் “இரவின் நிழல்” என்ற படத்தை இயக்கியுள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத் பிரிஜிடா சாகா ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை […]
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் “சந்திரமுகி “. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் பி.வாசு தான் இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் […]
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா- பாலா கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், நடிகர் சூர்யா இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு, அஜித்தை வைத்து வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய […]
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 6-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் 5-வது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டிலை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஏனென்றால், இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிடும். நடந்து முடிந்த 5 சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். […]
நடிகர் விஷால் அடுத்ததாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைன்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தமிழ் தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் சண்டைக் காட்சிகளுக்கான VFX பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், படத்தை ஆகஸ்ட் […]
அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் மணிரத்தனம் இயக்கியுள்ளார். படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் முதல் பாகம் வரும் […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “யானை”.இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். குடும்ப கதையை மையமாக வைத்து இந்த […]
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான பாடல்கள், டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம். இந்த நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் […]
தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்ததாக “தி லெஜன்ட்” படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த திரைப்படத்தில் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய செரி & ஜெடி ஆகியோர் […]
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் “சூர்யா 41” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கப்படவுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா- பாலா கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு, சிறுத்தை, வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாவே தகவல்கள் […]
நடிகர் அஜித்குமார் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ” AK61″ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்புராயனும், சுப்ரிம் சுந்தரும் பணியாற்றி வருகிறார்கள். படத்தில் நடிகை மஞ்சுவாரியர், நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் வீரா என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். […]
கேஜிஎப் என்ற பிரமாண்ட படத்தை மக்களுக்கு கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து “சலார்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான கேஜிஎப் 1, கேஜிஎப் 2 படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதில் கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் […]