மிக சிறந்த ஓவியரும், எழுத்தாளருமாகிய ஹெச்.ஜி.வெல்ஸ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1866 ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் அருகே உள்ள ப்ரூம்ளி என்னும் நகரில் பிறந்தவர் தான் ஹெச்.ஜி.வெல்ஸ். இவர் சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். குறிப்பாக இவர் எழுதிய தி டைம் மெஷின் எனும் நாவல் வெளியாகி பெரும் அளவில் வெற்றி பெற்றதோடு, இலக்கிய உலகில் பரபரப்பாகவும் பேசப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல அறிவியல் புனைகதைகள் எழுதி வந்த இவர், […]
விஞ்ஞான உலகையே வியக்க வைத்த ஜேம்ஸ் திவார் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1842 ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள கின்கார்டைன் எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் ஜேம்ஸ் திவார். இவர் விஞ்ஞான உலகையே வியப்படைய செய்தவர். காரணம் 1897 ஆம் ஆண்டு இவர் கண்டறிந்த இரட்டைச் சுவர் கண்ணாடி குடுவை தான். அதாவது குளிர்ந்த நிலையிலும், வெப்பநிலையிலும் பொருட்களை பாதுகாக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்ட பிளாஸ்க்கை கண்டறிந்தவர் இவர் தான். வெற்றிடத்தின் […]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி ஒஹையோ என்னும் பகுதியில் பிறந்தவர் தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். 1987 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இளநிலை அதிகாரியாக பணியாற்றிய இவர், இரண்டு ஆண்டுகளில் கடற்படை விமானி ஆகியுள்ளார். அதன் பின்பு, 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி டிஸ்கவரி விண்வெளி […]
ஆங்கில அகராதியை முதன்முதலில் உருவாக்கிய சாமுவேல் ஜான்சன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1709 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள லிக்ஃபீல்டு என்ற இடத்தில் பிறந்தவர் தான் ஆங்கில அகராதியை உருவாக்கிய சாமுவேல் ஜான்சன். இவர் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், இலக்கியத் திறனாய்வாளர், வாழ்க்கை வரலாற்றாளர் மற்றும் ஆசிரியராகவும் விளங்கியுள்ளார். ஜோன்சன் ஆக்சுபோர்டு பெம்புரோக் கல்லூரியில் பயின்ற இவர், பண உதவி கிடைக்காததால் தனது படிப்பை இடைநிறுத்தி அதன் பின்பு பாடசாலை ஆசிரியராக […]
பெண் விடுதலைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர் தான் ஈ.வெ.ராமசாமி என அழைக்கப்படும் தந்தை பெரியார் பெண் விடுதலைக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்டவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர் இவர் தான். மக்களிடையே காணப்படும் மூட நம்பிக்கையும், அந்த மூட நம்பிக்கைக்கு காரணமான கடவுள் நம்பிக்கையும் எதிர்த்த இவர், தமிழ் சமூகத்திற்காக […]
திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தவர் தான் தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா என அறியப்படும் சி.என்.அண்ணாதுரை. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளி படிப்பை சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், அதன்பின் கல்லூரி படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் கற்றுள்ளார். கல்லூரி முடித்தவர்கள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் எனும் […]
பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1874 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர் தான் ராணுவ வீரர் வில்லியம் பெண் டிங் பிரபு. இவர் ஒரு போர் வீரராக தனது வாழ்க்கையை தொடங்கி, அதன் பின்பு தனது 22வது வயதில் நாடாளுமன்றத்தின் உறுப்பினராகினார். அதன் பின்பு 1803ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர், சர் தாமஸ் மன்றோ கொண்டு வந்த பல்வேறு வருவாய் […]
வங்காள எழுத்தாளரும், பன்மொழி அறிஞருமாகிய சையது முஜ்தபா அலியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1904 ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி வங்காள மாகாணத்தின் கரீம்கஞ்ச் நகரில் பிறந்தவர் தான் சையது முஜ்தபா அலி. இந்த கரீம்கஞ்ச் நகர் தான் தற்போது அசாம் என அழைக்கப்படுகிறது. இவர் சிறந்த எழுத்தாளரும், பன்மொழி அறிஞருமாக திகழ்ந்துள்ளார். வங்காள மொழியை தாய்மொழியாகக் கொண்ட இவர் இந்தி, அரபி, பாரசீகம், உருது, பிரஞ்சு, மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட […]
செயற்கை கதிரியக்கத்தை உருவாக்கிய பிரெஞ்சு அறிவியலாளர் ஐரீன் ஜோலியட் கியூரி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1897 ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பாரிஸில் பிறந்தவர் தான் ஐரீன் ஜோலியட் கியூரி. இவர் புதிய தனிமங்களை வைத்து செயற்கைக் கதிரியக்கத்தை உருவாக்கிய பிரஞ்சு அறிவியலாளர். புகழ் பெற்ற நோபல் தம்பதிகளான மேரி கியூரி மற்றும் பியரி கியூரியின் மகள் தான் ஐரீன் ஜோலியட் கியூரி. இவரது கணவர் பிரடெரிக் ஜோலியட் கியூரி. இவர் தனது கணவருடன் […]
சுதந்திரப் போராட்ட வீரர் வினோபா பாவே பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கைக்கோடா எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் வினோபாபாவே. இவர் சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத்தின் தந்தையும் ஆவார். இவர் மகாராஷ்டிரா தர்மா எனும் மாத இதழை 1903 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். கதராடை, கிராமத்தில் தீண்டாமை, கிராம மக்களின் கல்வி, சுதந்திரம், மேம்பாடு ஆகியவற்றிற்கு பாடுபட்டவர். பூதான் எனும் […]
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை அடுத்த புத்த மங்கலத்தில் பிறந்தவர்தான் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும், சரித்திரக் கதைகளின் முன்னோடியுமாக திகழ்ந்துள்ளார். இவர் எழுதிய புத்தகங்களை படித்த காங்கிரஸ் தலைவர் டி எஸ் எஸ் ராஜன் அவர்கள் இவர் எழுத்துலகில் சாதிக்க வேண்டியவர் என வாழ்த்தி கூறியுள்ளார். இவர் 35 சிறுகதை தொகுதிகள், புதினங்கள், […]
பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் நினைவு நாள் வரலாற்றில் இன்று. 1935 ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தவர் தான் பிரபல வயலின் இசைக் கலைஞர் வைத்தியநாதன். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக் கலைஞராக தான் இருந்துள்ளனர். இவர் தனது பன்னிரண்டாவது வயதில் வயலின் கற்றுக் கொண்டுள்ளார். அப்போது முதலே தந்தைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதன் பின் 1976 ஆம் […]
சமஸ்கிருத அறிஞரும், தத்துவ ஞானியுமான பண்டிட் கோபிநாத் கவிராஜின் பிறந்த தினம் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்கா அருகே உள்ள தாம்ரே கிராமத்தில் பிறந்தவர் தான் பண்டிட் கோபிநாத் கவிராஜ், இவர் சிறந்த சமஸ்கிருத அறிஞரும், தத்துவஞானியுமாக விளக்கியுள்ளார். இவர், விஷீத்த வாணி, அகண்ட மஹாயோக், பாரதிய சன்ஸ்க்ருதி கீசாதனா, தாந்த்ரிக் சாஹித்ய ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். 1934 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு […]
சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவிய தாதாபாய் நவ்ரோஜியின் பிறந்த தினம் இன்று. 1825 ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் தான் தாதாபாய் நவ்ரோஜி. இவர் இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர். எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்கை தத்துவ உதவி பேராசிரியராக பணியாற்றிய இவர் 1852 ஆம் ஆண்டில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியை தீவிரமாக எதிர்த்த இவர், இந்திய தேசிய […]
இளம் வயதில் புக்கர் விருது பெற்ற இந்திய பெண் எழுத்தாளர் கிரண் தேசாய் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி புதுடெல்லியில் பிறந்தவர் தான் இந்தியப் பெண் எழுத்தாளர் கிரண் தேசாய். இவர் மிக இளம் வயதிலேயே புக்கர் விருது பெற்ற பெண் எழுத்தாளர் ஆவார். 1997 ஆம் ஆண்டு இவர் தனது முதன் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதன் பின்பு தனது வாழ்க்கை அனுபவங்களை வைத்து, 1998-ல் […]
நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1853 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி லத்வியா நாட்டின் ரிகா நகரில் பிறந்தவர் தான் பிரெட்ரிக் வில்ஹெம் ஆஸ்வால்டு. இவர் ஒரு நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய வேதியியலாளர் ஆவார். மின்வேதியியல், ரசாயன இயக்கவியல் குறித்து ஆய்வு மேற்கொண்ட இவர், நீர்த்தல் விதியை கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார். எனவே தான் ஆஸ்வால்டு நீர்த்தல் விதி […]
கர்நாடக இசை கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியில் செம்பை எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் செம்பை வைத்தியநாத பாகவதர். இவர் கர்நாடக இசை உலகில் 70 ஆண்டுகள் புகழ் பெற்றவராக திறந்துள்ளார். தஞ்சை இசை விழா, கரூர் சங்கீத திருவிழா என பல இடங்களில் இவருக்கு கச்சேரி நடத்தக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இவர் […]
புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய இத்தாலியை சேர்ந்த மரியா மாண்ட்டிசோரி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1870 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி இத்தாலியில் பிறந்த மருத்துவரும் கல்வியாளருமாகியவர் தான் மரியா மாண்டிசோரி. இவர் புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர். நோட்டு புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவியம், வண்ணத்தாள் ஆகியவற்றின் மூலமாக கல்வி முறையை மாற்றியவர். குழந்தைகளுக்கு பாடங்களை எளிதாக கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் இவரது கொள்கை […]
இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1958 ஆம் ஆண்டு ஆகஸ்டு 29 ஆம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் மற்றும் கேதரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாக பிறந்தவர் தான் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உடன்பிறந்தவர்கள் எட்டு பேர் உள்ளனர். இரும்பு தொழிற்சாலையில் கிரேன் இயக்குனராக இருந்த இவரது தந்தை ஜோசப் ஒரு இசைக் கலைஞனாக இருந்துள்ளார். இந்நிலையில் காலப்போக்கில் மைக்கேல் ஜாக்சனும் இசையில் […]
தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமையை மீட்டு தந்த அய்யன்காளி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1863ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி கேரளா மாநிலம் திருவிதாங்கூர் மாகாணத்தில் உள்ள பெருங்காட்டுவிளா எனும் ஊரில் பிறந்தவர் தான் அய்யன்காளி. இவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுத் தந்த கேரள போராளி. இவர் பட்டியல் சமூகத்தினரின் விடுதலைக்காகப் பாடுபட்டவர். ஓய்வில்லாது உழைக்கும் முறையை ஒழித்துக்கட்டும் போராட்டத்தை 2004 ஆம் ஆண்டு தொடங்கிய இவர் முதல் முறையாக கேரளாவில் நடந்த விவசாய தொழிலாளர் போராட்டம் […]