மிக சிறந்த ஓவியரும், எழுத்தாளருமாகிய ஹெச்.ஜி.வெல்ஸ் பிறந்த தினம் இன்று…!

மிக சிறந்த ஓவியரும், எழுத்தாளருமாகிய ஹெச்.ஜி.வெல்ஸ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1866 ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் அருகே உள்ள ப்ரூம்ளி என்னும் நகரில் பிறந்தவர் தான் ஹெச்.ஜி.வெல்ஸ். இவர் சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். குறிப்பாக இவர் எழுதிய தி டைம் மெஷின் எனும் நாவல் வெளியாகி பெரும் அளவில் வெற்றி பெற்றதோடு, இலக்கிய உலகில் பரபரப்பாகவும் பேசப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பல அறிவியல் புனைகதைகள் எழுதி வந்த இவர், தி ஐலண்ட் ஆஃப் டாக்டர் மாரோ, தி இன்விசிபிள் மேன், தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், தி ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம் ஆகிய நூல்களையும் எழுதி பெரும் புகழை பெற்றுள்ளார். சுமார் 50 ஆண்டுகாலம் தனது வாழ்நாளை எழுத்து பணிக்காகவே அர்ப்பணித்த எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் அவர்கள் தனது 80 ஆவது வயதில் உயிரிழந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025