சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், மத்திய அமைச்சரும், அமேதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்மிருதி இரானி மற்றும் அவரது உதவியாளர் மீது ஊழல் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்மிருதி இரானி, அவரது தனிப்பட்ட செயலாளர் விஜய் குப்தா மற்றும் ரஜ்னீஷ் சிங் ஆகியோருக்கு எதிராக வர்திகா சிங் எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வர்திகா சிங் கூறுகையில், பெண்கள் மத்திய ஆணையத்தில் உறுப்பினராக இருக்க ஸ்மிருதி இரானியின் தூண்டுதலின் பேரில் அவரது இரண்டு “உதவியாளர்களான” விஜய் […]
வருகிற 2021 -ல் வழக்கமானா சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை தவிர்த்து வங்கிகள் எப்பொழுதெல்லாம் விடுமுறை என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வங்கிகளுக்கு நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அரசு வேலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறை கிட்டத்தட்ட வங்கிகளுக்கும் கொடுக்கப்படும். அவ்வாறு வரப்போகும் புதிய வருடமாகிய 2021 ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை தெரியுமா? ஜனவரி 26 செவ்வாய் கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறை, மார்ச் 11 […]
அசாமில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மணிப்பூருக்கு செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவரில் ஒருவருமான உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அசாம் மற்றும் மணிப்பூருக்கு மூன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அசாம், மணிப்பூரில் மூன்று நாள் பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அசாமில் நடனக் கலைஞர்கள் நடனமிட்டு அவருக்கு பிரமாண்ட […]
சுங்கச் சாவடிகளில் பாஸ்ட் டேக் வசூல் டிசம்பர் 24ஆம் தேதி அன்று முதல் முறையாக ரூ.80 கோடியை கடந்துள்ளது. அன்றைய தினம் வரலாற்று சாதனையாக மொத்த 50 லட்சம் பாஸ்ட் டேக் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நெடுஞ்சாலைகளில், பாஸ்ட் டேக் பயன்படுத்துவது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.இந்தியா முழுவதும் இதுவரை 2.20 கோடி பாஸ்ட் டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி […]
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களுக்கு மத்தியில், வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் நேற்று கூறுகையில், தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தால் இந்திய ரயில்வேக்கு சுமார் ரூ.2,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, பியாஸ் மற்றும் அமிர்தசரஸ் இடையே ரயில்வேயின் ஒரு பகுதி தடுக்கப்பட்டுள்ளது. டார்ன் தரன் மாவட்டம் வழியாக செல்லும் மாற்று வழியை நாங்கள் பயன்படுத்துகிறோம். ஆனால், இது ஒரு நீண்ட தூரம் இருப்பதால் தேவையான அளவு ரயில்களை இயக்க […]
தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தன, இதன் விளைவாக அங்கு மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது என்கவுண்டர் நடந்து வருகிறது. இந்த என்கவுண்டரில் இதுவரை அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். இருப்பினும், 2 ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.
வீடுகளில் ஊழியர்கள் மூலமாக டெலிவரி செய்யப்படக்கூடிய சிலிண்டர்களை நேரடியாக சென்று நாமே எடுத்து வந்தால் நமக்கு 19.50 பைசா கிடைக்கும். தற்போதைய காலத்தில் மின்சாரம் மூலமாகவே இயங்கக்கூடிய பல அடுப்புகள் வந்தாலும், கேஸ் அடுப்பு என்பது மக்களால் விரும்பப்படுவது மட்டுமல்லாமல் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும் ஒன்றாகவும் உள்ளது. மானிய விலையில் வாங்கக்கூடிய சிலிண்டர்கள் வருடத்துக்கு 12 மட்டுமே கொடுக்கப்படுகிறது, அதற்க்கு அதிகமாக தேவைப்பட்டால் சந்தை விலையில் நாம் வாங்கி கொள்ளலாம். இந்த கேஸ் அடுப்புக்கான சிலிண்டர் முதலில் […]
ஐஆர்சிடிசி இணையதளம் மிகவும் எளிமையானதாகவும், அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இணையதளம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் வசதியை மேம்படுத்தும் பணியை ஆய்வு செய்த பியூஷ் கோயல்,பயனர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்துவதற்காக ரயில்வே பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.தங்களது ரயில் பயணத்துக்காக பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யும் பயணிகளுக்கு முழுமையான வசதிகளை வழங்கும் வகையில் இணயதளம் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார். ரயில்வே வாரியம், ரயில்வே தகவல் […]
அருணாச்சலப் பிரதேசத்தில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், அதில் 6 பேர் பாஜகவுக்கு தாவியுள்ளனர். அருணாச்சல பிரதேசத்தின் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ,ஐக்கிய ஜனதாதளம் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே கொண்டுள்ளது.அதாவது அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதீஷ் குமாருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கட்சியின் ஏழு எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பாஜகவிற்கு சேர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே தற்போது பாஜகவில் 48 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.காங்கிரஸ் மற்றும் தேசிய […]
மத்திய அரசின் இந்த புதிய வேளாண் சட்டத்தை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பரிசோதனையாக செய்து பார்க்குமாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 31 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் புதிது புதிதாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு […]
ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை இன்று மதியம் 12 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் இத்திட்டம் வழங்குவதோடு, நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது என்று மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் […]
தாராவியில் ஏப்ரல் 1 க்கு பிறகு இன்று முதன் முதலாக ஒருவருக்கு கூட கொரோனா இல்லாத நாளாக அமைந்துள்ளது. தாராவியில் இதுவரை மொத்தம் 3,788 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் தற்பொழுது 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் 8 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்.இதில் 3,464 கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். For the first time since #COVID19 outbreak, zero positive cases reported in Mumbai’s Dharavi, today. — ANI (@ANI) December 25, 2020
ஆக்ராவில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் காரின் உள்ள என்ஜின் முன்பகுதியில் நான்கு அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த குடும்பத்தினர் உடனடியாக ஒரு மீட்புக் குழுவைத் தொடர்பு கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழு காரில் இருந்து பாம்பை பிடித்தனர். தற்போது வெப்பநிலை குறைவதால், இந்த பாம்புகள் நகர்ப்புறங்களில் தங்குமிடம் தேடுகின்றன என்று வனவிலங்கு எஸ்ஓஎஸ் பாதுகாப்பு திட்ட இயக்குநர் கூறினார்.
ரஜினி விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அண்ணாத்த படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு நெகடிவ் என வந்துள்ளது. இருப்பினும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து, இன்று ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை […]
ஹரியானா: சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகளின் போராட்ட இடத்தில் தீயணைப்பு வீரர்கள் இலவசமாக ‘பானி பூரி’ விநியோகிக்கத் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் முடிந்தது. விவசாயிகளின் போராட்ட இடத்தில் ‘பானி பூரி’ விற்கும் ஒரு கடைக்கு அருகில் பானி பூரி வாங்குவதற்கு பணம் இல்லை என்று சிறுவன் கூறினான். இதனை, அடுத்து என்ன நடந்தது என்பது குழந்தையையும் வண்டி அருகிலுள்ள உள்ள விவசாயிகளையும் வியப்பில் ஆழ்த்தியது. அங்கு வந்த 7 தீயணைப்பு வீரர்கள், “நாங்கள் அனைவரும் எங்கள் […]
கடந்த சில மாதங்களுக்கு முன் சீனா தொடர்பான பல மொபைல் செயலிக்கு மத்திய அரசு தடை செய்தது இது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், பல மொபைல் செயலி தடை செய்த போதிலும், சிலர் இன்னும் தடைசெய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில் தடைசெய்யப்பட்ட மொபைல் செயலிப் பயன்படுத்துவதில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தடைசெய்யப்பட்ட […]
ஆதரவற்ற மக்கள் ஒருநாளில் இரண்டு வேளை உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவதை பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது – கவுதம் காம்பீர் முன்னாள் இந்திய அணி வீரரும், கிழக்கு டெல்லி தொகுதி எம்பியாக வெற்றி பெற்றுள்ள கவுதம் காம்பீர், தனது தொகுதிக்குட்பட்ட காந்திநகர் மார்க்கெட்டில் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாயில் சாப்பிடும் வகையில் புதிய கேன்டீனை திறந்து வைத்துள்ளார். இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 50 பேர் சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரமான, சத்தான உணவு […]
காஷ்மீரை சார்ந்த பூஜா என்ற பெண் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டார். இவர் காரை ஓட்ட வேண்டும் என்று அவரது கனவாக இருந்தது. தற்போது பூஜாவின் இந்த கனவு நனவாகியுள்ளது. பூஜா காஷ்மீரில் உள்ள பசோஹலி சந்தர் கிராமத்தில் வசிப்பவர், பூஜா கதுவாவின் முதல் பெண் பஸ் டிரைவர் ஆனார். பூஜாவின் இந்த கனவையும், அவரின் விடாமுயற்சியையும் பார்த்துபலர் பாராட்டி வருகின்றனர். கடந்த புதன்கிழமை காலை, பூஜா ஜம்முவிலிருந்து கத்துவாவிற்கும், கத்துவாவிலிருந்து ஜம்முக்கும் பஸ்ஸை இயக்கினார். பூஜாவை […]
சகோதரர் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்ததாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அண்ணாத்த படப்பிடிப்பின்போது 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், நடிகர் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்தநிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர் உட்பட பலரும் கேட்டறிந்த நிலையில், தெலுங்கானா மாநில […]
கடந்த நான்கு வாரங்களாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை தவறாக எதிர்க்கட்சிகள் வழிநடத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின்கீழ், 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த தவணைத் தொகையான 18 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார்.இதன் பின்பு தொடர்ந்து ஆறு மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.அப்பொழுது அவர் கூறுகையில், கட்சிகள் அரசியல் செய்வதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் […]