ஷோபியன் என்கவுண்டர்.. ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை.. ..!

The terrorists opened fire on the security forces. An unidentified terrorist was shot dead in the encounter.

தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது,  பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தன, இதன் விளைவாக அங்கு மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில்,  பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது  என்கவுண்டர் நடந்து வருகிறது. இந்த என்கவுண்டரில் இதுவரை அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். இருப்பினும், 2 ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.