வீடுகளில் ஊழியர்கள் மூலமாக டெலிவரி செய்யப்படக்கூடிய சிலிண்டர்களை நேரடியாக சென்று நாமே எடுத்து வந்தால் நமக்கு 19.50 பைசா கிடைக்கும். தற்போதைய காலத்தில் மின்சாரம் மூலமாகவே இயங்கக்கூடிய பல அடுப்புகள் வந்தாலும், கேஸ் அடுப்பு என்பது மக்களால் விரும்பப்படுவது மட்டுமல்லாமல் அதிக அளவில் உபயோகப்படுத்தப்படும் ஒன்றாகவும் உள்ளது. மானிய விலையில் வாங்கக்கூடிய சிலிண்டர்கள் வருடத்துக்கு 12 மட்டுமே கொடுக்கப்படுகிறது, அதற்க்கு அதிகமாக தேவைப்பட்டால் சந்தை விலையில் நாம் வாங்கி கொள்ளலாம். இந்த கேஸ் அடுப்புக்கான சிலிண்டர் முதலில் […]
ஐஆர்சிடிசி இணையதளம் மிகவும் எளிமையானதாகவும், அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இணையதளம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் வசதியை மேம்படுத்தும் பணியை ஆய்வு செய்த பியூஷ் கோயல்,பயனர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்துவதற்காக ரயில்வே பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.தங்களது ரயில் பயணத்துக்காக பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யும் பயணிகளுக்கு முழுமையான வசதிகளை வழங்கும் வகையில் இணயதளம் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார். ரயில்வே வாரியம், ரயில்வே தகவல் […]
அருணாச்சலப் பிரதேசத்தில் நிதிஷ்குமாரின் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், அதில் 6 பேர் பாஜகவுக்கு தாவியுள்ளனர். அருணாச்சல பிரதேசத்தின் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ,ஐக்கிய ஜனதாதளம் இப்போது ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே கொண்டுள்ளது.அதாவது அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதீஷ் குமாருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கட்சியின் ஏழு எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் பாஜகவிற்கு சேர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே தற்போது பாஜகவில் 48 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.காங்கிரஸ் மற்றும் தேசிய […]
மத்திய அரசின் இந்த புதிய வேளாண் சட்டத்தை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு பரிசோதனையாக செய்து பார்க்குமாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 31 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் புதிது புதிதாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு […]
ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை இன்று மதியம் 12 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் இத்திட்டம் வழங்குவதோடு, நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது என்று மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் […]
தாராவியில் ஏப்ரல் 1 க்கு பிறகு இன்று முதன் முதலாக ஒருவருக்கு கூட கொரோனா இல்லாத நாளாக அமைந்துள்ளது. தாராவியில் இதுவரை மொத்தம் 3,788 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் தற்பொழுது 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் 8 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்னர்.இதில் 3,464 கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். For the first time since #COVID19 outbreak, zero positive cases reported in Mumbai’s Dharavi, today. — ANI (@ANI) December 25, 2020
ஆக்ராவில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் காரின் உள்ள என்ஜின் முன்பகுதியில் நான்கு அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அந்த குடும்பத்தினர் உடனடியாக ஒரு மீட்புக் குழுவைத் தொடர்பு கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழு காரில் இருந்து பாம்பை பிடித்தனர். தற்போது வெப்பநிலை குறைவதால், இந்த பாம்புகள் நகர்ப்புறங்களில் தங்குமிடம் தேடுகின்றன என்று வனவிலங்கு எஸ்ஓஎஸ் பாதுகாப்பு திட்ட இயக்குநர் கூறினார்.
ரஜினி விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அண்ணாத்த படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு நெகடிவ் என வந்துள்ளது. இருப்பினும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து, இன்று ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை […]
ஹரியானா: சிங்கு எல்லையில் உள்ள விவசாயிகளின் போராட்ட இடத்தில் தீயணைப்பு வீரர்கள் இலவசமாக ‘பானி பூரி’ விநியோகிக்கத் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் முடிந்தது. விவசாயிகளின் போராட்ட இடத்தில் ‘பானி பூரி’ விற்கும் ஒரு கடைக்கு அருகில் பானி பூரி வாங்குவதற்கு பணம் இல்லை என்று சிறுவன் கூறினான். இதனை, அடுத்து என்ன நடந்தது என்பது குழந்தையையும் வண்டி அருகிலுள்ள உள்ள விவசாயிகளையும் வியப்பில் ஆழ்த்தியது. அங்கு வந்த 7 தீயணைப்பு வீரர்கள், “நாங்கள் அனைவரும் எங்கள் […]
கடந்த சில மாதங்களுக்கு முன் சீனா தொடர்பான பல மொபைல் செயலிக்கு மத்திய அரசு தடை செய்தது இது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், பல மொபைல் செயலி தடை செய்த போதிலும், சிலர் இன்னும் தடைசெய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில் தடைசெய்யப்பட்ட மொபைல் செயலிப் பயன்படுத்துவதில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தடைசெய்யப்பட்ட […]
ஆதரவற்ற மக்கள் ஒருநாளில் இரண்டு வேளை உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவதை பார்க்கையில் மனம் வேதனை அடைகிறது – கவுதம் காம்பீர் முன்னாள் இந்திய அணி வீரரும், கிழக்கு டெல்லி தொகுதி எம்பியாக வெற்றி பெற்றுள்ள கவுதம் காம்பீர், தனது தொகுதிக்குட்பட்ட காந்திநகர் மார்க்கெட்டில் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாயில் சாப்பிடும் வகையில் புதிய கேன்டீனை திறந்து வைத்துள்ளார். இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 50 பேர் சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரமான, சத்தான உணவு […]
காஷ்மீரை சார்ந்த பூஜா என்ற பெண் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டார். இவர் காரை ஓட்ட வேண்டும் என்று அவரது கனவாக இருந்தது. தற்போது பூஜாவின் இந்த கனவு நனவாகியுள்ளது. பூஜா காஷ்மீரில் உள்ள பசோஹலி சந்தர் கிராமத்தில் வசிப்பவர், பூஜா கதுவாவின் முதல் பெண் பஸ் டிரைவர் ஆனார். பூஜாவின் இந்த கனவையும், அவரின் விடாமுயற்சியையும் பார்த்துபலர் பாராட்டி வருகின்றனர். கடந்த புதன்கிழமை காலை, பூஜா ஜம்முவிலிருந்து கத்துவாவிற்கும், கத்துவாவிலிருந்து ஜம்முக்கும் பஸ்ஸை இயக்கினார். பூஜாவை […]
சகோதரர் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்ததாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அண்ணாத்த படப்பிடிப்பின்போது 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், நடிகர் ரஜினிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்தநிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர் உட்பட பலரும் கேட்டறிந்த நிலையில், தெலுங்கானா மாநில […]
கடந்த நான்கு வாரங்களாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை தவறாக எதிர்க்கட்சிகள் வழிநடத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின்கீழ், 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த தவணைத் தொகையான 18 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார்.இதன் பின்பு தொடர்ந்து ஆறு மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.அப்பொழுது அவர் கூறுகையில், கட்சிகள் அரசியல் செய்வதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் […]
அனைத்து வாகனங்களுக்கும் 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் நிற்கும் நேரத்தை குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலையில், இன்று காணொலி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் […]
கேரளா: 21 வயதான பிஎஸ்சி மாணவி ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் அடுத்த மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்றதும், அவர் மாநிலத்தின் முதல் இளம் மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சிபிஎம் வேட்பாளரான ஆர்யா, முடவன்முகல் வார்டில் இருந்து யுடிஎஃப் வேட்பாளர் ஸ்ரீகலாவை 2872 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அவர் மாவட்டத்தின் இளைய வேட்பாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். ஆல் புனிதர்கள் கல்லூரி திருவனந்தபுரத்தில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கணித மாணவர், ஆர்யா பாலா சங்கத்தின்மாநிலத் தலைவராகவும், சிபிஎம் மாணவர் பிரிவான […]
தேசிய தலைநகரான டெல்லியில் இன்று குளிர் மற்றும் பனிமூட்டமான வானிலை நீடித்தது எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஐந்து டிகிரி செல்சியஸுக்குக் கீழே இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இன்று பருவ சராசரியைவிட 3 புள்ளிகள் குறைந்து 4.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நடந்து வரும் போராட்டம் பாஜக அரசாங்கத்தின் தோல்வியின் ஒரு நினைவுச்சின்னம் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகிறார். மத்திய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் எதிர்ப்பு இன்று உடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், நடந்து வரும் போராட்டம் பாஜக அரசாங்கத்தின் தோல்வியின் ஒரு நினைவுச்சின்னம் என்று கூறினார். தனது டிவிட்டர் பக்கத்தில் அகிலேஷ் யாதவ், “வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் இன்று ஒரு மாதம் […]
இங்கிலாந்தில் இருந்து தெலுங்கானா திரும்பிய ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.அந்த நபர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சி.எஸ்.ஐ.ஆர்-செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஏழுபேருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று புதிய பரிமாற்றம் அடைந்துள்ள வைரஸ் தான் காரணமா என கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இங்கிலாந்தில் இருந்து தெலுங்கானாவுக்கு திரும்பிய 846 பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜியைத் விமர்சித்து அவரது சித்தாந்தம் மேற்கு வங்கத்தை அழித்துவிட்டது என கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாநில விவசாயிகள் மையத்தின் நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் மூலம் பயனடைய அனுமதிக்கவில்லை என்று அவர் கண்டித்தார். அவர் மேலும் கூறுகையில்,”வங்காள விவசாயிகள் மையத்தின் திட்டங்களின் நன்மைகளை இழந்துவிட்டனர். திட்டங்களின் நன்மைகளை விவசாயிகளுக்கு சென்றடைய அனுமதிக்காத ஒரே மாநிலம் மேற்கு வங்காளம் என்றார். […]