தனது வீட்டை தீ வைத்து கொளுத்த வந்த மர்ம நபர்களை தடுக்க முயன்ற ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராச்சகொண்டா எனும் இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் தான் பிக்ஷபதி ராவ். இவர் 40% தீக்காயங்களுடன் தற்போது மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது வீட்டை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்த வந்ததாகவும், அதனை தடுக்க முயன்று அவர் கதவைத் திறந்ததும் வெளியே இருந்த ஒருவர் எரிபொருள் ஒன்றை […]
தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த தலைவர்கள் அடுத்த மூன்று நான்கு மாதங்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவார்கள் என்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். முன்னதாக சட்டமன்றத் தேர்தலின் போது, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த தலைவர்கள் பாஜகவில் இணைந்தார்கள். கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் அவர்களின் திட்டங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பாஜகவுக்குச் சென்றனர்.இருப்பினும், இப்போது இந்த தலைவர்கள் விரக்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவர்கள் தங்கள் பகுதிக்கு எந்த திட்டங்களையும் […]
நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதி குறித்து மருத்துவமனை இன்று முடிவு செய்யவுள்ளது. ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவுமில்லை எனவும், ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எளினும் ரஜினியை முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். […]
நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை டெல்லியில் கொடியசதைத்து தொடங்கி வைக்கவுள்ளார். புதிய வகையான இந்தத் தொழில்நுட்பங்களின் வாயிலாகப் புதியதொரு பயண அனுபவத்தையும், மேம்படுத்தப்பட்ட இணைப்பையும் பெறலாம். முழுவதும் தானியங்கி முறையில் இயங்குவதால் ஓட்டுநர் இல்லாத இந்த ரயில்களில் மனிதத் தவறுகள் களையப்படுகின்றன.மெஜந்தா மார்க்கத்தில் இந்தச் சேவை துவக்கப்பட்ட பிறகு டெல்லி மெட்ரோவின் பிங்க் மார்க்கத்திலும் 2021-ஆம் ஆண்டு மத்தியில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் நாளை […]
பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள்சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்ற, இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வருகின்ற 31-ம் தேதி கேரள சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த 23-ஆம் தேதி நடத்த இருந்த வேளாண் சிறப்பு கூட்டத்திற்கு ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், தற்போது கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆரிஃப் முகமது […]
வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக வரும் 29 ஆம் தேதி மத்திய அரசுடன் விவசாய அமைப்புகள் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்துள்ளனர். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 31 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு 5 […]
பிரிட்டனில் இருந்து கேரளா வந்தடைந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது புதிய வகையான கொரோனா வைரஸா? என கண்டறிய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக […]
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்து டெல்லி தேவாலயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளனர். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா, உலகமெங்கும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் இணைந்து டெல்லி தேவாலயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு ஒன்று சிங்கு எல்லைக்கு வந்து விவசயிகளுடன் இணைந்து, பண்டிகை கொண்டாடியுள்ளனர். […]
ஜம்மு-காஷ்மீரில் டி.ஆர்.எஃப் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை அம்மாநில போலீசார் கைது செய்தனர். காஷ்மீரில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் நடமாடி வருவதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் மற்றும் சிறப்பு பிரிவினர் சோதனை சாவடி அமைத்து சோதனை நடத்தினார்கள். அப்பொழுது ஸ்ரீநகர் நோக்கி சென்ற ஒரு காரை பிடித்து சோதனை செய்த போலீசார், அதில் இருக்கும் பொருட்களை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த காரில் 16 துப்பாக்கிகள் இருந்ததை கண்டு அதிர்ந்த போலீசார், […]
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள குடிமை அமைப்பு, முன்னுரிமை குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் கூற்றுப்படி, வீட்டிலிருந்து வீடு கணக்கெடுப்பு அல்லது நகர்ப்புற சுகாதார மையங்களில் (யு.எச்.சி) சுகாதார ஊழியர்களுடன் தங்களை பதிவு செய்யாத நகரத்தின் முன்னுரிமை குழுக்களின் குடிமக்கள் தங்களை www.ahmedabadcity.gov இல் பதிவு செய்யலாம். சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள் ஆகியோருக்கான பதிவு செயல்முறையை […]
கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரிய கலையான களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “களரிப்பயட்டு – ரத்தத்தை துள்ளச்செய்யும் மண்சார்ந்த விளையாட்டு.இதற்கு உலகில் சரியான இடம் கிடைக்கவேண்டும். இவ்விளையாட்டிற்கு அதிக உடல்திறனும் மன ஒழுக்கமும் தேவை.இதை தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்த்திருப்பது,கிராம மக்கள் பங்கேற்க அவர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுக்கும். வாழ்த்துகள்” என […]
இங்கிலாந்திலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்திற்கு திரும்பிய ஒரு பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 25 க்குப் பிறகு இங்கிலாந்திலிருந்து அவுரங்காபாத் மாவட்டத்திற்கு வந்த 44 நபர்களில் இந்தப் பெண்ணும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த இங்கிலாந்து திரும்பியவர்களில் 11 பேர் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அறிகுறியற்றவர் என்று அவுரங்காபாத் மாநகராட்சியின் (ஏ.எம்.சி) சுகாதார அதிகாரி டாக்டர் நீதா படல்கர் தெரிவித்தார். அவரது மாதிரி புனேவை தளமாகக் கொண்ட […]
ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த மருத்துவ காப்பீடு திட்டமானது அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும் வழங்குவதோடு,நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது என்று மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட […]
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் பிறந்த நாளையொட்டி நேற்று டெல்லியில் உள்ள ஒரு பூங்கா மற்றும் பொது வளாகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று கிறிஸ்மஸ் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டாலும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளும் கொண்டாடப்பட்டு வந்தது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி அவர்கள் அவருக்கு அஞ்சலி […]
சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், மத்திய அமைச்சரும், அமேதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்மிருதி இரானி மற்றும் அவரது உதவியாளர் மீது ஊழல் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்மிருதி இரானி, அவரது தனிப்பட்ட செயலாளர் விஜய் குப்தா மற்றும் ரஜ்னீஷ் சிங் ஆகியோருக்கு எதிராக வர்திகா சிங் எம்.பி-எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வர்திகா சிங் கூறுகையில், பெண்கள் மத்திய ஆணையத்தில் உறுப்பினராக இருக்க ஸ்மிருதி இரானியின் தூண்டுதலின் பேரில் அவரது இரண்டு “உதவியாளர்களான” விஜய் […]
வருகிற 2021 -ல் வழக்கமானா சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை தவிர்த்து வங்கிகள் எப்பொழுதெல்லாம் விடுமுறை என்பதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வங்கிகளுக்கு நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அரசு வேலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறை கிட்டத்தட்ட வங்கிகளுக்கும் கொடுக்கப்படும். அவ்வாறு வரப்போகும் புதிய வருடமாகிய 2021 ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை தெரியுமா? ஜனவரி 26 செவ்வாய் கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு விடுமுறை, மார்ச் 11 […]
அசாமில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மணிப்பூருக்கு செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவரில் ஒருவருமான உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அசாம் மற்றும் மணிப்பூருக்கு மூன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அசாம், மணிப்பூரில் மூன்று நாள் பயணம் மேற்கொள்ளும் அமித்ஷா பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அசாமில் நடனக் கலைஞர்கள் நடனமிட்டு அவருக்கு பிரமாண்ட […]
சுங்கச் சாவடிகளில் பாஸ்ட் டேக் வசூல் டிசம்பர் 24ஆம் தேதி அன்று முதல் முறையாக ரூ.80 கோடியை கடந்துள்ளது. அன்றைய தினம் வரலாற்று சாதனையாக மொத்த 50 லட்சம் பாஸ்ட் டேக் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நெடுஞ்சாலைகளில், பாஸ்ட் டேக் பயன்படுத்துவது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.இந்தியா முழுவதும் இதுவரை 2.20 கோடி பாஸ்ட் டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி […]
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்களுக்கு மத்தியில், வடக்கு ரயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் நேற்று கூறுகையில், தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தால் இந்திய ரயில்வேக்கு சுமார் ரூ.2,400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, பியாஸ் மற்றும் அமிர்தசரஸ் இடையே ரயில்வேயின் ஒரு பகுதி தடுக்கப்பட்டுள்ளது. டார்ன் தரன் மாவட்டம் வழியாக செல்லும் மாற்று வழியை நாங்கள் பயன்படுத்துகிறோம். ஆனால், இது ஒரு நீண்ட தூரம் இருப்பதால் தேவையான அளவு ரயில்களை இயக்க […]
தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தன, இதன் விளைவாக அங்கு மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது என்கவுண்டர் நடந்து வருகிறது. இந்த என்கவுண்டரில் இதுவரை அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். இருப்பினும், 2 ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.