மருத்துவ காப்பீடு திட்டம் -தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

PM Narendra Modi launches Ayushman Bharat PM-JAY SEHAT to extend coverage to all residents of Jammu & Kashmir

ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் பங்கேற்றனர்.இந்த மருத்துவ காப்பீடு திட்டமானது அனைத்து விதமான சுகாதாரப் பாதுகாப்பையும்  வழங்குவதோடு,நிதி ஆபத்தில் இருந்து மக்களைக் காத்து, அனைவருக்கும் தரமான மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரச் சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது என்று மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டை இத்திட்டம் வழங்குகிறது.ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரையில் காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது.கூடுதலாக சுமார் 15 லட்சம் குடும்பங்களுக்கு இது விரிவாக்கம் செய்யப்படுகிறது. பிரதமர்-ஜெய்யுடன் இணைந்து செயல்பட உள்ள இத்திட்டத்தின் பலன்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பெறலாம். பிரதமர்-ஜெய்யுடன் இணைந்துள்ள அனைத்து மருத்துவமனைகளில் இருந்தும் சிகிச்சை பெறலாம்.