ரஜினி எப்பொழுது டிஸ்சார்ஜ்? இன்று முடிவு- அப்போலோ மருத்துவமனை!

Actor Rajinikanth has been admitted to Apollo Hospital in Hyderabad and the hospital will decide today on the date of his discharge.

நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதி குறித்து மருத்துவமனை இன்று முடிவு செய்யவுள்ளது.

ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவுமில்லை எனவும், ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எளினும் ரஜினியை முழு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இந்தநிலையில், ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவுள்ளது. மேலும் ரஜினிக்கு சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.