காரில் துப்பாக்கிகளை கொண்டு சென்ற விவகாரம்.. டி.ஆர்.எஃப் அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது!

The SOG had set up a special checkpoint in the area after getting reliable input regarding the movement of terrorists with automatic weapons.

ஜம்மு-காஷ்மீரில் டி.ஆர்.எஃப் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகளை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.

காஷ்மீரில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் நடமாடி வருவதாக அம்மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் மற்றும் சிறப்பு பிரிவினர் சோதனை சாவடி அமைத்து சோதனை நடத்தினார்கள். அப்பொழுது ஸ்ரீநகர் நோக்கி சென்ற ஒரு காரை பிடித்து சோதனை செய்த போலீசார், அதில் இருக்கும் பொருட்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அந்த காரில் 16 துப்பாக்கிகள் இருந்ததை கண்டு அதிர்ந்த போலீசார், அதில் பயணம் செய்த இருவரிடம் விசாரித்தனர், அப்பொழுது அவர்கள் இருவரும் டி.ஆர்.எஃப் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.