வீட்டை தீ வைத்து கொளுத்த முயன்றவர்களை தடுத்த இன்ஸ்பெக்டர் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்பு!

An inspector from Hyderabad who tried to stop a mysterious person from setting his house on fire has been rescued with 40 per cent burns.

தனது வீட்டை தீ வைத்து கொளுத்த வந்த மர்ம நபர்களை தடுக்க முயன்ற ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் 40 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ராச்சகொண்டா எனும் இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் தான் பிக்ஷபதி ராவ். இவர் 40% தீக்காயங்களுடன் தற்போது மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது வீட்டை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்த வந்ததாகவும், அதனை தடுக்க முயன்று அவர் கதவைத் திறந்ததும் வெளியே இருந்த ஒருவர் எரிபொருள் ஒன்றை தன் மீது எறிந்ததாகவும் கூறியுள்ளார்.

அதன்பின் சில நிமிடங்களிலேயே இன்ஸ்பெக்டர் ராவ் தீப்பிடித்து எரிந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் 40 சதவீத தீக்காயங்களுடன் ராவ் மீட்கப்பட்டுள்ளார். தற்பொழுது இவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.