கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரிய கலையான களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “களரிப்பயட்டு – ரத்தத்தை துள்ளச்செய்யும் மண்சார்ந்த விளையாட்டு.இதற்கு உலகில் சரியான இடம் கிடைக்கவேண்டும். இவ்விளையாட்டிற்கு அதிக உடல்திறனும் மன ஒழுக்கமும் தேவை.இதை தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்த்திருப்பது,கிராம மக்கள் பங்கேற்க அவர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுக்கும். வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.
unknown nodeunknown node