போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய தன்னார்வலர் குழு!

On the Delhi Singh border, a group of volunteers from a Delhi church celebrate Christmas with farmers involved in the struggle.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்து டெல்லி    தேவாலயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு கிறிஸ்துமஸ் விழாவை  கொண்டாடியுள்ளனர்.

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா, உலகமெங்கும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் இணைந்து டெல்லி    தேவாலயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு ஒன்று சிங்கு எல்லைக்கு வந்து விவசயிகளுடன் இணைந்து, பண்டிகை கொண்டாடியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கிறிஸ்துமஸ் என்பது உலக மக்கள் அனைவருக்குமான பண்டிகை. இந்த நாள் நம் அனைவருக்கும் ஒரு சிறப்பான நாள். இங்கு விவசாயிகள் வெளியில் அமர்ந்திருப்பதைப் பார்த்த போது இந்த வேதனையை எங்களால் தங்க முடியவில்லை.எனவே நாங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட சிங்கு  எல்லைக்கு வந்தோம்.

இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காகவும், இந்த போராட்டத்திற்கு நாள்ல தீர்வு கிடைப்பதற்காகவும், நாங்கள் இயேசுவிடம் பிரார்த்தனை செய்துள்ளோம் என தன்னார்வலர் குழு தெரிவித்துள்ளது.