மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் ஒருசில மாதங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான பிரச்சாரங்களை அந்தந்த மாநிலங்களில் போட்டியிடும் கட்சிகள் தீவிரமாக தொடங்கிவிட்டன. இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோர் உள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் என்றாலே திரிணாமூல் காங்கிரஸ், […]
காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் வியாழக்கிழமை ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தை சந்தித்து மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தினர் . இந்த சந்திப்புக்கு பின்னர் ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்று நான் ஜனாதிபதியிடம் கூறினேன். இச்சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை இந்த விவசாயிகள் […]
இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப்-சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் கீழ் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: இந்திய உளவுத்துறை காலியிடங்கள்: 2000 பணி: Assistant Central […]
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரிடம் ராகுல் […]
சர்வதேச சோலார் கூட்டமைப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா உலகை வழிநடத்தி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, சாந்திநிகேதனில் இன்று நடைபெற்று வருகிறது .ஆகவே பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.அவரது உரையில் , விஸ்வ பாரதி இன்று நூற்றாண்டு விழா கொண்டாடுவதால் ஒவ்வொரு இந்தியருக்கும் இது ஒரு பெருமையான தருணம்.விஸ்வ பாரதி என்பது குருதேவின் சிந்தனை, பார்வை மற்றும் கடின உழைப்பின் உண்மையான உருவகமாகும். […]
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் செல்லவிருந்த நிலையில், திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. நேற்று புறப்படும் போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிக்கப்பட்டதால் உடனடியாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் கூறுகையில், கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா […]
வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரிடம் ராகுல் காந்தி சமர்பிக்கவுள்ள நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. […]
இந்த கொரோனா நெருக்கடிக்கு பின்பு உண்மையான ஹீரோ யார் என்பதை உலகம் புரிந்து கொண்டுள்ளதாக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் கூறியுள்ளார். கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு தின நிகழ்ச்சியில் காணொளி வழியே கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் பேசும்பொழுது, தற்போது புதிய கொரானா வைரஸை பற்றி பிரிட்டனில் கேள்விப்பட்டிருப்பீர்கள். போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை, இது தீவிரமான ஒன்றுதான். உலகத்தில் ஒவ்வொரு நபரும் தடுப்பு மருந்து எடுத்துக் […]
பீகாரில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த கடையை அகற்ற சொல்லியதால் போலீஸ்காரர் மீது தேநீரை ஊற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் போலீஸ் அதிகாரி ஒருவர் சட்டவிரோதமாக சாலையோரத்தில் பெண்மணி கடை அமைந்திருப்பதை கண்டு அதை அகற்றுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த பெண்மணி அவர் சொல்வதை கேட்காமல் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்துள்ளார். காவலரிடம் தொடர்ச்சியாக கடையை அகற்றியே ஆக வேண்டும் என கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண்மணி கையிலிருந்த சூடான தேநீரை காவலர் மீது […]
பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிட உள்ளார். பிரதமரின் கிசான் திட்டம் : பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அந்தவகையில் பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை […]
பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தனது கிழக்கு டெல்லியின் நாடாளுமன்றத் தொகுதியில் ரூ1 க்கு ஏழைகளுக்குக்கான மதிய உணவு பரிமாறும் ‘ஜான் ரசோய்’ கேண்டீன்களைத் தொடங்கவுள்ளார். இதுபோன்ற முதல் கேண்டீனை வியாழக்கிழமை காந்தி நகரில் திறந்து வைப்பார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு கேண்டீனையாவது திறக்க கம்பீர் திட்டமிட்டுள்ளார். இது குறித்து கம்பீர் கூறுகையில் “சாதி, மதம், மதம் அல்லது நிதி நிலைமை ஆகியவற்றைப் […]
விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, சாந்திநிகேதனில் இன்று நடைபெறுகிறது.விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் கடந்த 1921-ஆம் ஆண்டு குருதேவ் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது.இது நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகம். கடந்த 1951-ஆம் ஆண்டு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம், நாடாளுமன்ற சட்டம் மூலம் மத்திய பல்கலைக்கழகமாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகமாகவும் அறிவிக்கப்பட்டது.இது நவீன பல்கலைக்கழகமாக உருவானாலும், இந்த பல்கலைக்கழகம் குருதேவ் தாகூர் வகுத்த கல்வி […]
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். பூர்பா மெடினிபூர் மாவட்டம் ராம்நகர் சாலையில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அருகே பாஜகவினர் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது இந்த மோதல் ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் பின் போலீசார் அந்த பகுதியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.ஊர்வலமாக சென்றபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் […]
74 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க காரணமாக இருந்த ஜம்மு–காஷ்மீர் மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக அங்கு நடந்த மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தலில் (டி.டி.சி), 74 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. தேசிய மாநாடு (என்.சி) 67 இடங்களை வென்றுள்ளது. அதே நேரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 27 இடங்களைப் பெற்றுள்ளது. […]
ஜம்மு–காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக அங்கு நடந்த மாவட்ட வளர்ச்சி மன்ற தேர்தலில் (டி.டி.சி) , 74 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா ஒற்றை மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது.தேசிய மாநாடு (என்.சி) 67 இடங்களை வென்றுள்ளது, அதே நேரத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 27 இடங்களைப் பெற்றுள்ளது. என்.சி மற்றும் பி.டி.பி ஆகியவற்றை உள்ளடக்கிய குப்கர் கூட்டணி மொத்தம் 110 இடங்களை வென்றுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் நன்னடத்தை அலுவலருக்கான SBI PO அட்மிட் கார்டுகளை வெளியிட்டுள்ளது . எஸ்பிஐ பிஓ SBI PO தேர்வுக்கு பதிவு செய்தவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் , அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கான இணையதளம் செயல்படாமல் இருந்தால் ,பயனர்கள் இணையதளம் மீண்டும் இயங்கும்வரை காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. SBI PO அதிகாரிகளுக்கான 2,000 காலியிடங்களை நிரப்ப டிசம்பர் 31 முதல் […]
பாதிக்கப்பட்டவர்களும் ஒரு தடுப்பூசி எடுக்க வேண்டும், மேலும் தடுப்பூசி விநியோகம் குறித்து இந்தியா நன்கு தயாராக உள்ளது என்று பாரத் பயோடெக் தலைவரும் எம்.டி. கிருஷ்ணா எல்லா இன்று தெரிவித்தார். கொரோனா வைரஸுக்கு எதிராக “கோவாக்சின்” எனப்படும் இந்திய சொந்த தடுப்பூசியை பாரத் பயோடெக் உருவாக்கி வருகிறது. நோய்த்தொற்று உள்ளவர்கள் , தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா.? “பதில் ஆம்” ஏனென்றால் அவர்களுக்கு நல்ல டி செல்கள் இல்லை என கிருஷ்ணா எல்லா கூறினார். கூட்டத்தில் பேசுகையில், […]
வருகின்ற 25 ஆம் தேதி 9 கோடி விவசாயிகள் பலனடையும் வகையில் 18,000 கோடி ரூபாய் நிதிஉதவி திட்டத்தை துவக்கிவைக்கிறார் பிரதமர் மோடி. பிரதமரின் கிசான் திட்டம் : பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நிதி உதவி : அந்தவகையில் பிரதமர் கிசான் […]
பெங்களூருவில் டி.சி.எஸ் 10 கே மராத்தான் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மராத்தான் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெற்றது, இருப்பினும் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக, இது டிசம்பரில் மாதம் நடைபெற்றது. இந்த மராத்தானில் பங்கேற்க ஏராளமானோர் வந்தனர். இந்த மாரத்தான் போட்டியில் ஒரு அதிசயம் ஓன்று நிகழ்ந்தது. அது என்னெவென்றால் அங்கிதா கவுர் என்ற ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஓருவர் வெறும் 62 […]
அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு முதல் எந்த உயர்கல்வியையும், அரசின் உதவித் தொகையுடன் பட்டியலின மாணவர்கள் பயில முடியும் என மத்திய அரசு […]